Home விளையாட்டு ஆசிய கோப்பை ஹீரோ மீது CSK ஸ்கெட்ச் – சேப்பாக்கில் விளையாடப் போறாரா?

ஆசிய கோப்பை ஹீரோ மீது CSK ஸ்கெட்ச் – சேப்பாக்கில் விளையாடப் போறாரா?

ஆசிய கோப்பையில் மிரட்டல் பேட்டிங்கை வெளிப்படுத்திய 27 வயது இளம் வீரருக்கு சி.எஸ்.கே ஸ்கெட்ச் போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இந்தியா ஒன்பதாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது.

இந்த தொடரில் இலங்கையை சேர்ந்த 27 வயது இளம் வீரர் பதும்நிசங்கா அபாரமாக ஆடி அசத்தினார். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி தோல்வியைச் சந்தித்தாலும், நிசங்காவின் சதம் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த விருந்தாக அமைந்தது.

இந்நிலையில், நிசங்காவின் ஆட்டத்தால் கவரப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெவான் கான்வேக்கு பதிலாக பதும்நிசங்காவை அணியில் சேர்க்கும் திட்டத்தில் உள்ளது என தகவல்கள் வெளியாகின்றன.

சென்னையின் சேப்பாக்க மைதானம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால், நிசங்காவின் பேட்டிங் இங்கு சிறப்பாக அமையும் என்று சி.எஸ்.கே தரப்பு கருதுகிறது என கூறப்படுகிறது.