Home விளையாட்டு “முதன்முறை சாதனைக்கு அரசின் பரிசு – செப்டம்பர் 29 தேசிய விடுமுறை!”

“முதன்முறை சாதனைக்கு அரசின் பரிசு – செப்டம்பர் 29 தேசிய விடுமுறை!”

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வரலாற்று வெற்றியை கொண்டாடும் வகையில் போட்ஸ்வாடாவில் வரும் 29 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர் ஓட்டம் நடைபெற்றது.

இந்த போட்டியில் ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானா தங்க பதக்கம் பெற்றது. தொடர் ஓட்ட பந்தயத்தில் முதன்முறையாக தங்கம் வாங்கி சாதனை படைத்துள்ளது. அதுவும் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி ஆப்பிரிக்க நாடு தங்க பதக்கம் வாங்குவது இதுவே முதன்முறையாகும்.

இந்த வரலாற்று வெற்றியை கொண்டாட அந்த நாட்டு அதிபர் ஜுமா போகக்கோ வரும் 29ஆம் தேதி பொது விடுமுறை என்று அறிவித்துள்ளார்.