விஜய் பிரச்சாரத்தில் 40 பேர் உயிரிழந்ததன் எதிரொளியாக தமிழகம் முழுவதும் நாளைய தினம் கடையடைப்பு நடைபெறும் என்று தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
கரூரில் விஜய் பிரச்சாரத்தில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது . இந்த நிலையில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கடையடைப்பு நடைபெறுவதாக தமிழக வணிகர் சங்கங்களின் பேரவையானது அறிவித்திருக்கிறது.
அதன்படி தமிழகம் முழுவதும் நாளை தினம் கடையடைப்பு நடைபெறும் என்று தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை அறிவிப்பை வெளியிட்டடிருக்கிறது.








