நாளை விஜயதசமி தினத்தை முன்னிட்டு அரசு பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது விஜயதசமியில் மாணவர் சேர்க்கைக்காக தமிழகத்தில் நாளை அனைத்து அரசு பள்ளிகளும் திறக்கப்படும் என்ற அறிவிப்பானது வெளியாகி இருக்கிறது.
ஆயுத பூஜை பண்டிகை கொண்டாடப்படக்கூடிய சூழலில் நாளை விஜயதசமி கொண்டாடப்படுகிறது. விஜயதசமி நாள் என்பது கல்விக்கு மிகவும் உகந்த நாளாக இருக்கிறது. விஜயதசமி நாளில் குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இதன் காரணமாக நாளை அனைத்து வகை அரசு பள்ளிகளும் திறக்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும். முதலாம் வகுப்பு அதேபோன்று எல் .கே.ஜி போன்ற வகுப்புகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்க வரும்போது அவர்களை பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அதேபோன்று தொடக்க கல்வித்துறை இயக்குனர் திரு நரேஷ் ஆகியோர் உத்தரவிட்டிருக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் இது போன்று விஜயதசமி நாளில் பள்ளிகள்
திறக்கப்படுகின்றன தற்போது பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை இருக்கிறது நாளை விடுமுறை நாளாக இருந்தாலும் கூட பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுருக்கிறார்கள்.
அதேபோன்று தனியார் பள்ளிகளும் நாளை தமிழகம் முழுவதும் திறக்கப்படுகின்றன. அவர்களும் விஜயதசமி நாளில் குழந்தைகளை சேர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். அரசு பள்ளிகளில் நாளை கணிசமான ஒரு எண்ணிக்கையில் குழந்தைகள் பள்ளிகளில் சேர்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.








