Home தமிழகம் அதிமுகவில் இபிஎஸ் அதிரடி – தூக்கி எறியப்பட்ட 4 நிர்வாகிகள் யார்?

அதிமுகவில் இபிஎஸ் அதிரடி – தூக்கி எறியப்பட்ட 4 நிர்வாகிகள் யார்?

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் நான்கு பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். கட்சியின் கொள்கைக்கு முரணாக செயல்பட்டதாகக் கூறி, நான்கு பேரை அதிமுகவிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மண்டபம் பேரூராட்சி அதிமுக செயலாளர் சீமான் மரக்காயர், மண்டபம் பேரூராட்சி ஐடி பிரிவு இணைச் செயலாளர் ஹமீது ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அதேபோல், மாவட்ட மீனவர் பிரிவு இணைச் செயலாளர் காதர் மொய்தீன் மற்றும் மாவட்ட மீனவர் பிரிவு இணைச் செயலாளர் பக்கர் ஆகியோரும் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவின் ஆதரவாளர்கள் என்பதாலேயே இவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.