அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில்லிருந்தும் செங்கோட்டையன் நீக்கப்படுவதாக இபிஎஸ் உத்தரவை பிறப்பித்திருக்கிறார்
செங்கோட்டையின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நீடித்து வந்த நிலையில் முன்னதாக ஆலோசனை கூட்டம் எல்லாம் நடந்தது தற்பொழுது அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில்லிருந்தும் நீக்கப்படுவதாக உத்தரவு வெளியாகி இருக்கிறது.
முன்னதாகவே ஆலோசனை கூட்டம் நடைபெற்றது என்ன முடிவு எடுக்கப்படலாம் அவர்கிட்ட முதல்ல நோட்டீஸ் அனுப்பப்படுமா இது போன்ற பல கோணங்கள்ல் பல கருத்துக்கள் நிலவி வந்தது.
ஆனா இப்ப நடவடிக்கை எடுத்திருக்காங்க. என்ன காரணம் குறிப்பிட்டு இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. . இபிஎஸ் மீது அதிருப்தி தெரிவிக்கக்கூடிய வகையில் செய்தியாளர்களை சந்தித்து பிரிந்து சென்ற அதிமுகவினரை ஒன்றிணைக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இபிஎஸ் க்கு கெடு விதித்திருந்தார் .
செங்கோட்டையன்.
எனவே தற்பொழுது செங்கோட்டையின் மீது ஒழுங்கு நடவடிக்கை என்பது எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் செங்கோட்டையன் அதிமுகாவினுடைய அமைப்பு செயலாளராகவும் அதேபோல ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தினுடைய மாவட்ட செயலாளராகவும் இருந்து வந்த நிலையில் அந்த பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் இன்று முதல் விடுவிக்கப்படுவதாக இபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.
நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையின் பிரிந்து சென்ற அதிமுகவினரை ஒன்றிணைக்க வேண்டும். அதாவது 10 நாட்களுக்குள் ஒன்றிணைக்க வேண்டும் இல்லை என்றால் அதனை நாங்கள் செய்வோம் என்று குறிப்பிட்டு இபிஎஸ்க்கு கெடு விதிக்கக்கூடிய வகையில் இபிஎஸ் மீது அதிருப்தி தெரிவிக்கக்கூடிய வகையில் செய்தியாளர்களை சந்தித்திருந்தார்.
எனவே செங்கோட்டையின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து இன்றைய தினம் இபிஎஸ் அவசர ஆலோசனை மேற்கொண்டிருந்தார். திண்டுக்கலில் அவர் வந்து இன்றைய தினம் அந்த பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கக்கூடிய சூழல்ல அங்க இருக்கக்கூடிய தனியார் விடுதியில் தங்கியிருந்த இபிஎஸ் முக்கிய நிர்வாகிகளோடு இன்றைய தினம் ஆலோசனை மேற்கொண்டிருந்தார்.
அந்த ஆலோசனையின் உடைய இறுதியாக இத்தகைய ஒரு முடிவை அதிமுக தலைமையானது எடுத்திருக்கிறது செங்கோட்டையனை பொறுத்தவரைக்கும் எம்ஜிஆரினுடைய காலத்திலிருந்து அதிமுகவில் இருந்து வரக்கூடிய ஒருவர் செய்தியாளர் சந்திப்பின் போது கூட குறிப்பிடுகையில் என்னுடைய உடம்பில் அதிமுக இரத்தம் ஓடுகிறது என்றெல்லாம் குறிப்பிட்டு பேசியிருந்தார்.
எனவே அவர் எம்ஜிஆர் காலத்திலிருந்து இருக்கக்கூடிய ஒருவர் கட்சியில் அமைச்சராகவும் அதாவது ஆட்சியின் போது அமைச்சராகவும் பல முக்கிய பொறுப்புகளிலும் வந்து இருந்து வந்த ஒருவர் அதேபோல கொங்கு மண்டலத்தில் அவருக்கென்று ஒரு கோட்டையாகவே வந்து இருந்து வந்த ஒரு இடமாகவே இருந்து வருகிறது
எனவே இத்தகைய ஒரு சூழலல் தற்பொழுது நேற்றைய தினம் செங்கோட்டையின் அதிருப்தி தெரிவித்து இருந்த நிலையில் தற்பொழுது அதிமுக தலைமை அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது எனவே அவர் இருக்கக்கூடிய அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்தும் அவர் விடுவிக்கப்படுப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்திருக்கிறது.
சற்று நேரத்திற்கு முன்பாக இபிஎஸ் முக்கிய நிர்வாகிகளோடு அவசர ஆலோசனை மேற்கொண்டிருந்தார். அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி. வேலுமணி, காமராஜ், ஓஎஸ் மணியன் மற்றும் விஜய பாஸ்கர் ஆகியரோடு ஒரே அறையில் இபிஎஸ் அந்த ஆலோசனை என்பது மேற்கொண்டிருந்தார்.
எனவே இந்த ஆலோசனையினுடைய இறுதியாக இத்தகைய முடிவானது எடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே முக்கிய நிர்வாகிகள் எல்லாம் அவர் மீது அதாவது செங்கோட்டையின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இபிஎஸ்ஐ வலியுறுத்தியதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஏனென்றால் நேற்றைய தினம் அவர் செய்தியாளர் சந்திப்பின் போது பல்வேறு விஷயங்களை இபிஎஸ் மீதான ஒரு அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். அதாவது அவர் வந்து நேரடியாக தலைமையை சந்தித்தோ அல்லது ஏதாவது ஒரு ஆலோசனை கூட்டத்தின் போதோ அவரினுடைய கருத்தை பதிவு செய்திருக்க வேண்டும்.
ஆனால் தலைமையினுடைய உத்தரவின்றி தலைமையினுடைய கட்டுப்பாட்டை மீறி ஒரு பொதுச் செயலாளரினுடைய கட்டுப்பாட்டை மீறி அவராகவே வந்து அந்த பகுதியில ரோட்சவ எல்லாம் நடத்தி செய்தியாளர்களை சந்தித்து அவரினுடைய அதிருப்தியை இப்படி தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது
எனவே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சியினுடைய முக்கிய நிர்வாகிகள் மூத்த நிர்வாகிகள் எல்லாம் பொதுச் செயலாளர் இபிஎஸயை கேட்டு கொண்டதாக நமக்கு தகவல்கள் எல்லாம் வெளியாகி இருந்தது இவர் இப்படியான ஒரு அதிருப்தியை வெளிப்படுத்தி இந்த ஒரு சூழல்ல அவர் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க போகிறார்கள் .
அவரிடம் விளக்கம் கேட்க போகிறார்களா நோட்டீஸ் அனுப்ப போகிறார்களா அல்லது கட்சியிலிருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறாரா என்றெல்லாம் கூட பல கேள்விகளும் எழுந்து வந்த நிலையில் தற்பொழுது முதல் கட்டமாக அவர் வந்து கட்சியில் இருக்கக்கூடிய முக்கிய பொறுப்புகள் அவர் வந்து மாவட்ட செயலாளராகவும் அமைப்பு செயலாளர் அமைப்பு செயலாளராகவும் இருந்து வந்த நிலையில் கட்சி பொறுப்புகளில் இருந்து அவர் விடுவிக்கப்படுவதாக இபிஎஸ் அந்த கையோப்பமிட்டு அந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்








