Home தமிழகம் சென்னைக்கு பெருமை சேர்க்கும் முதல் இரும்பு பாலம் – இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

சென்னைக்கு பெருமை சேர்க்கும் முதல் இரும்பு பாலம் – இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

சென்னையின் முக்கிய வணிக மையமாக திகழும் தியாகராய நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் உஸ்மான் சாலை சிஐடி நகரி இடையே 164 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தொழில் நுட்பத்தில் இரும்பு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

உஸ்மான் சாலையில் ஏற்கனவே உள்ள பாலத்துடன் இரும்பு பாலம் இணைக்கப்பட்டுள்ளது. 1.2 கிலோமீட்டர் நீளத்திற்கு 8.4 மீட்டர் அகலத்தில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தியாகராய நகரில் போக்குவரத்து நெரிசலை மிகப்பெரிய அளவில் குறைக்க போகும் சென்னையின் முதல் இரும்பு பாலத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இதனை ஒட்டி வண்ண விளக்குகளால் இரும்பு பாலம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.