Home தமிழகம் “சுங்கக்கட்டணம் உயர்வு – ‘இன்னும் ஐந்துரூபாய் கூடுதலா?’ ஓட்டுநர்கள் அதிருப்தி”

“சுங்கக்கட்டணம் உயர்வு – ‘இன்னும் ஐந்துரூபாய் கூடுதலா?’ ஓட்டுநர்கள் அதிருப்தி”

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சமயபுரம் சுங்கச்சாவடியில் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

சுங்கக்கட்டண உயர்வால் பெரும் சிரமத்தை சந்திப்பதாக வாடகை கார் ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையிலே
கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் காலையிலேயே மிகவும் பரபரப்பாக அவர்களுடைய பணிகளுக்காக சென்று கொண்டிருக்கின்றன.

இலகுரக வாகனங்கள் கனரக வாகனங்கள் என அனைத்தும் சென்று கொண்டிருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில் சுங்கவரி கட்டணம் செலுத்தக்கூடிய மையத்தில நள்ளிரவு 12 மணி முதல் சுங்கவரி கட்டணம் என்பது உயர்ந்திருக்கிறது.

வருடத்திற்கு ஒரு முறை உயர்த்தப்படக்கூடிய சுங்கவரி கட்டணம். மிக முக்கியமாக இந்த டோல் பிளாசா கடந்த வருடம் இதே நாளில் கட்டணம். உயர்த்தப்பட்டது.

அதாவது ஒரு முறை பயணம் மேற்கொள்வதற்கு 55 அதாவது இலகுரக வாகனம் கொடுக்க வேண்டும். இரண்டு முறை பயணம் மேற்கொண்டால் 85 தற்பொழுது உள்ளது.

ஏற்கனவே 80 என இருந்தது. இப்ப ஐந்துரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல வந்து ஒவ்வொரு வாகனங்களுக்கும் கட்டணம் ஐந்துரூபாய் என்பது இரண்டு முறை பயணத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது.