Home தமிழகம் “குழந்தையிலிருந்து இன்று வரை – ஸ்டாலின் பயணம் புதிய வடிவில்”

“குழந்தையிலிருந்து இன்று வரை – ஸ்டாலின் பயணம் புதிய வடிவில்”

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது ஒரு வார்த்தை சொல்ல முடியாத அளவுக்கு உள்ளது. நாம் என்ன நினைக்கிறோமோ அதனை இந்த தொழில்நுட்பங்கள் செய்தே முடித்து விடுகின்றது.

அதாவது இந்த அபரிவிதமாக வளர்ந்து வரும் ஏஜ(AI) கொண்டு இறந்தவர்களுடன் நாம் பேசுவது போன்றும். அவர்களுடன் நாம் புகைப்படம் எடுப்பது போன்றும். குழந்தைகள், பூனைகள் என அனைத்தையும் பேசுவது போல எல்லாவற்றையுமே உருவாக்கப்படுகிறது.

இவ்வாறு உருவாக்கப்படும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பலவிதமாக உலாவருகின்றன. அந்த வகையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ ஒன்றுசமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது ஏஐ தொழில்நுட்பத்தால் அவரது தந்தையும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் சிறுவயது முதல் தற்போது வரை அவர் கடந்து வந்த பாதை குறித்து விளக்கும் விதமாக வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.