Home தமிழகம் ”ரகசிய தகவல்” சிக்கியது லட்சங்கள் :

”ரகசிய தகவல்” சிக்கியது லட்சங்கள் :

தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கணக்கில் வராத 1 லட்சத்து 52,000 ரூபாயை பரிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி வட்டாயாட்சியர் அலுவலகம் பின்புறம் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது . இந்த அலுவலகம் மூலமாகதான் ஓட்டுநர் உரிமம் , லைசன்ஸ் மற்றும் புதிய வாகனம் பதிவு சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சான்றுகள் பெறுவதற்கு இடைதரகர்கள் மூலம் பணம் பெறுவதாக ஊழல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி பீட்டர் பாலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து இன்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் டி.எஸ்.பி தலைமையிலான போலீசார் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு வந்த பொதுமக்கள் மற்றும் இடைத்தரகர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது கணக்கில் வராமல் ஒரு லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டு. தற்போது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.