சட்டப்படி விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2019ல் பிறப்பிக்க வேண்டிய உத்தரவை 2022ல் பிறப்பித்துள்ளதால் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சட்டப்படி விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வருமான வரி சட்டப்படி விஜய்க்கு ஒன்றரை கோடி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இதனை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வாதமாக முன்வைத்திருக்கிறது. கடந்த 2016, 2017 ஆம் நிதி ஆண்டுக்கான வருமானமாக விஜய் தாக்கல் செய்தபோது அந்த ஆண்டுக்கான வருமானமாக 35 கோடியே 42,82,90 என்று குறிப்பிட்டார்.
அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமானவத்துறை நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தது அதன்படி புலி படத்திற்காக அவர்
பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என்ற ஒரு தகவலை வந்து கண்டறிந்தது.
இதை தொடர்ந்து வருமானத்தை மறைப்பதற்காக ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் 2022 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடயை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இடையில் இரண்டு முறை இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியிடப்பட்ட போதும் பெரிய அளவில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் இந்த வழக்கு வந்து இன்றைக்கு நீதிபதி சரவணன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வந்து அபராதம் விதித்து 2019 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதிக்கு முன்பே இந்த உத்தரவை வந்து பிறப்பிக்க வேண்டும். ஆனால் காலதாமதமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அதனை ரத்து செய்ய வேண்டும் என்று வாதித்தார்.
அதே சமயம் வருமானவரி துறை சார்பக ஆஜரான வழக்கறிஞர் வருமானவரி சட்டப்படி நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்தது சரிதான் என்றும் விஜய் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வாதிக்கப்பட்டது.
இதை அடுத்து இதே போன்ற ஒரு வழக்கில் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் நகலை தாக்கல் செய்ய விஜய் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கினுடைய விசாரணையை அக்டோபர் 10ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்.








