Home தமிழகம் “பால் விலை உயர்வு தாக்கம்… டீ, காபி ரசிகர்களின் பாக்கெட் மீது கத்தி!”

“பால் விலை உயர்வு தாக்கம்… டீ, காபி ரசிகர்களின் பாக்கெட் மீது கத்தி!”

சென்னையில் டீ காபியின் விலை நாளை முதல் உயர்த்தப்படுவதாக டீக்கடை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. மூல பொருட்களின் விலை உயர்வு காரணமாக நாளை முதல் தலைநகர் சென்னையில் டீ மற்றும் காபி விலை உயர்த்தப்பட உள்ளதாக டீக்கடை வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்திருக்கிறார்கள்.

அதன் விலை பட்டியலை ஆங்காங்கே இருக்கக்கூடிய ஹோட்டல்கள் டீக்கடைகளில் புதிய விலை பட்டியல் ஒட்டப்பட்டிருக்கிறது. நாளை முதல் இந்த விலை அமலுக்கு வருகிறது.

குறிப்பாக பால் விலை உயர்வு டீ மற்றும் காபிக்கு பயன்படுத்தக்கூடிய மூல பொருட்களின் விலை உயர்வு போக்குவரத்து செலவினங்கள் அதிகரிப்பு இதன் காரணமாக இந்த விலையேற்றத்திற்கான காரணம் என டீக்கடை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்திருக்கிறார்கள்.

குறிப்பாக நாளை முதல் ஒரு டீ 12 ரூபாயிலிருந்து 15ஆக உயர்த்தப்படுவதாகவும் காபியின் விலை ₹15லிருந்து 20ஆக உயர்த்தப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.