Home தமிழகம் நடித்து காட்டிய சுர்ஜித் :

நடித்து காட்டிய சுர்ஜித் :

நெல்லையில் காதல் விவகாரத்தில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவினின் வழக்கில் சுர்ஜித் நடித்து காட்டியதை வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் கவின் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் கவினை படுகொலை செய்தது எப்படி என்று சிபிசிஐடி காவல் துறையிடம் சம்பவ இடத்தில் சுர்ஜித் நடித்து காட்டினார்.

நேற்று மாலை திருநெல்வேலி நீதிமன்றம் சுர்ஜித் மற்றும் அவரது தகப்பனார் சரவணனுக்கு இரண்டு நாட்கள் சிபிசிஐடி காவல் கொடுத்த நிலையில் நேற்றிலிருந்தே விடிய விடிய அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை 50க்கும் மேற்பட்ட கேள்விகளுடன் சிபிசிஐடி போலீசார் டி.எஸ்.பி நவராஜ் தலைமையில் மற்றும் இன்ஸ்பெக்டர் உலக ராணி அனைவரும் சுர்ஜித் மற்றும் சரவணனரிடம் இரண்டு வெவ்வேறு அறைகளில் வைத்து தீவிரமான விசாரணையை மேற்கொண்டதாக சிபிசிஐடி தரப்பிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இன்று மாலை சற்று முன்பாக சுர்ஜித்தை கொலை நடந்த திருநெல்வேலி மாநகரத்தின் கேடிசி நகர் பகுதிக்கு நேரில் அழைத்துச் சென்ற டி.எஸ்.பியும் இன்ஸ்பெக்டரும் இந்த கொலை சம்பவத்தை சுர்ஜித் எப்படி அரங்கேற்றினார் என நடித்து காண்பித்து அதனை வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.

இதனால் அந்த பகுதியில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரிடமிருந்து வாக்கு மூலத்தையும் வீடியோவாக பதிவு செய்த சி.பி.சிஐடி போலீசார் மீண்டும் அவரை சி.பி.சிஐடி அலுவலகத்திற்கு கூட்டி வந்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் இன்று காலை முதலே சி.பி.சிஐடியின் தென் மாவட்ட உயர் அலுவலர்கள் அனைவருமே திருநெல்வேலியில் முகாமிட்டுள்ளனர். சிபிசிஐடின் எஸ்.பிஆன ஜவகர் இன்று காலை சென்னையிலிருந்து கிளம்பி தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்து பின்னர் திருநெல்வேலி வந்து சேர்ந்தார்.

அவரும் இந்த விசாரணையில் பங்கு பெற்று கேள்விகளை இருவரிடமும் கேட்டு வருவதாக தெரிய வந்திருக்கிறது. இதனை அடுத்து சிபிசிஐடின் உயர் அதிகாரியான டி.ஐஜி வரண்குமார் மற்றும் ஐஜி அன்பு இருவரும் நாளை வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது ..

அதனை உறுதிப்படுத்திட வேண்டும். நாளை மாலை 6.00 மணியுடன் சி.பி.சிஐடி காவல் சுர்ஜித் மற்றும் சரவணனுக்கு முடியும் நிலையில் இரண்டு நாட்களை பயன்படுத்தி கொண்டு அவர்களிடமிருந்து முழு தகவல்களையும் பெறும் தீவிர நடவடிக்கைகளில் சி.பி.சிஐடி இறங்கி உள்ளது .எனவே கூற வேண்டு