Home தமிழகம் “தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி வழங்குகிறது – திமுக பொய் பிரசாரம்: தமிழிசை”

“தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி வழங்குகிறது – திமுக பொய் பிரசாரம்: தமிழிசை”

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு எவ்வித நிதியும் ஒதுக்குவதில்லை என்று திமுக பொய் பிரசாரம் செய்து வருகிறது என்று பாஜக மூத்த நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் பிறந்தநாளை ஒட்டி பாஜக சார்பில் சென்னை திருவான்மியூரில் நலத்திட்ட உதவிகள் விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் அமித்ஷா இபிஎஸ் சந்திப்பு கூட்டணிக்கு ஆரோக்கியமான சூழ்நிலை என்றும் ,2026ல் தமிழகத்தில் இரட்டை இலையுடன் தாமரை மலரும் எனவும் கூறினார்.

இன்னைக்கு ஒரு மாநிலம் சிறப்பாக நடத்தப்படுவதற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு தேவை அந்த ஒத்துழைப்பை சிறப்பாக நல்கி கொண்டிருக்கும். பாரத பிரதமர், எப்ப பார்த்தாலும் தமிழகத்திற்கு அவர்கள் உதவி செய்யல என்று ஒரு பொய் குற்றச்சாட்டை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்