Home தமிழகம் “வாழை இலையின் வாழ்வு! – திருநெல்வேலியில் வரலாறு காணாத விலை ஏற்றம்”

“வாழை இலையின் வாழ்வு! – திருநெல்வேலியில் வரலாறு காணாத விலை ஏற்றம்”

இன்று சுப முகூர்த்தம் நாளை ஓணம் பண்டிகை இதன் எதிரொழியாக திருநெல்வேலி மாவட்டத்தில் வாழை இலை விலை கிடுகிடுவென உயர்ந்துவிட்டது என்றே கூற வேண்டும்.

ஒரு கெட்டாக 200 வாழை இலை உள்ள ஒரு கட்டு 3,000 ரூபாய்க்கு இன்று திருநெல்வேலி முழுவதும் அனைத்து பகுதிகளிலும் விற்பனை ஆகிறது.

ஆனால் சில்லறை விற்பனையில் ஒரு இலையின் விலை 20 ரூபாயாக தற்போது இருக்கிறது. அதை கணக்கிட்டால் 200 இலைகள் கொண்ட ஒரு கட்டு 4,000 ரூபாயை தொடுகிறது. ஓணம் பண்டிகை மற்றும் சுப முகூர்த்த தினங்கள்.

அடுத்தடுத்து வருவதால் திருநெல்வேலியில் வாழை இலையின் விலை வரலாறு காணாத உச்சத்தில் உள்ளது. நேற்றுவரை 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு இலை இன்று 15 ரூபாய்க்கும் அதற்கும் மேலாக 20 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

200 இலைகள் கொண்ட ஒரு கட்டு 3,000 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவது பொதுமக்களை ஒரு பக்கம் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

மறுபக்கம் பண்டிகைகள் மற்றும் சுப முகூர்த்த தினங்களுக்கு இலைகளை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வது வழக்கமான ஒன்றுதான்.

அந்த வகையில் இன்று செப்டம்பர் நான்காம் தேதி சுப முகூர்த்த தினம் என்பதால் திருமணம் மற்றும் பல்வேறு சுப நிகழ்ச்சிகள் அதிகளவில் நடைபெறுகின்றன.

அண்டை மாநிலமான கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் கலை கட்டியுள்ளது. இந்த இரட்டை தேவையின் காரணமாக விருந்து மற்றும் பூஜைகளுக்கு அத்தியாவசியமான வாழை இலைக்கான தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக வாழை விவசாயிகளும் வாழை மொத்த வியாபாரிகளும் தெரிவித்தனர்.

இந்த விலை உயர்வின் காரணமாக ஒரு தனி வாழை இலை 15 ரூபாய்க்கும் ஐந்து இலைகள் கொண்ட திருநெல்வேலி வட்டார வழக்கில் ஒரு பூட்டு என்று குறிப்பிடுவார்கள்.

ஒரு பூட்டு 75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தனியாக இலைகள் வாங்கினால் 20 ரூபாய்க்கு இன்று காலை விற்பனை செய்யப்படுகிறது . நேற்று 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட இலை இன்று 20 ரூபாயாக அதிகரித்துள்ளது.

மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் தேவை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மற்ற மாவட்டமான தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஆத்தூர் போன்ற பகுதிகளில்லிருந்து வாழை இலைகளை அதிகளவில் கொள்முதல் செய்து திருநெல்வேலி மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே அனுப்பி வைக்கின்றனர்.

விலை கடுமையாக உயர்ந்திருந்த போதிலும் பண்டிகை மற்றும் சுப நிகழ்ச்சி தேவைக்காக பொதுமக்கள் போட்டி போட்டு கொண்டு வாழை இலைகளை வாங்கி செல்கின்றனர்