Home தமிழகம் “திருவல்லிக்கேணியில் தாரை தப்பட்டை முழக்கத்துடன் விநாயகர் ஊர்வலம் – கூடுதல் போலீஸ் பாதுகாப்பு”

“திருவல்லிக்கேணியில் தாரை தப்பட்டை முழக்கத்துடன் விநாயகர் ஊர்வலம் – கூடுதல் போலீஸ் பாதுகாப்பு”

சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டு வரும் நிலையில் திருவல்லிக்கேணி பகுதியில் பிரபலமான விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்து வருகிறது.

சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டு வரும் நிலையில் திருவள்ளிக்கேணி பகுதியில் பிரபலமான விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்து வருகிறது.

திருவள்ளிக்கேணியில் பிரபலமான எல்லிச ராஜா, கந்தப்ப ராஜா, வில்லேந்திய விநாயகர், அள்ளிக்குளம் ராஜா, திருவள்ளிக்கேணி மகாராஜா, மார்டர் ராஜா என பல விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்று வருகிறது.

தாரைத்தப்பட்டை முழுங்க விநாயகர் ஊர்வலம் என்பது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்களும் பலர் இங்கு வந்து ஊர்வலத்தை கண்டு ரசித்து வருகின்றனர்.

சென்னை திருவல்லிக்கேணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வைக்கப்பட்டிருக்கும் விநாயகர் சிலைகள் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையில் கரைப்பதற்காக திருவல்லிக்கேணி ஹைரோடு வழியாக எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன.

திருவள்ளிக்கேணி ஹைரோட் பகுதி மசூதி உள்ள பகுதி என்பதோடு சற்று பதட்டம் மிகுந்த பகுதி என்பதால் வழக்கத்தை விட கூடுதலான அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு படுத்தப்பட்டுள்ளனர்.

விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது திருவள்ளிக்கேணி ஹைரோடு மற்றும் பாரதி சாலை சந்திப்பு பகுதியில் உள்ள மசூதி அருகே விநாயகர் சிலைகள் ஊர்வலம் எடுத்துச் செல்லப்படுவதால் அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மசூதி முன்பாக தடுப்புகள் அமைக்கப்பட்டும் போலீஸ் வாகனங்கள் நிறுத்தியும் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27 ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில் சென்னை மாநகரம் முழுவதும் கடந்த நான்கு நாட்களாக பூஜை செய்யப்பட்டு விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்கப்படுகிறது.

மெரினா கடற்கரையில் மட்டும் 1565 விநாயகர் சிலைகள் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 16500 போலீசார் மற்றும் ஊர் காவல் படையினர் 2000 பேர் என கூடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.