Home தமிழகம் “வேளாண் வளர்ச்சிக்கு புதிய தளம் – சென்னையில் வணிக திருவிழா”

“வேளாண் வளர்ச்சிக்கு புதிய தளம் – சென்னையில் வணிக திருவிழா”

வருகின்ற 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் சென்னையில் வேளாண் வணிக திருவிழா நடைபெறுகிறது என்று வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வருகின்ற 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் வேளாண் வணிக திருவிழா நடைபெறுகிறது என்றும், சென்னையில் வேளாண் வணிக திருவிழாவை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்

இதை தொடர்ந்து வேளாண் வணிக திருவிழாவில் உழவர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று பயன்பெற எம்.ஆர் கே பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.