Home தொழில்நுட்பம் “கற்பனைக் காதல், நிஜ தண்டனை – ஏஐயில் சிக்கிய இளைஞர் கைது!”

“கற்பனைக் காதல், நிஜ தண்டனை – ஏஐயில் சிக்கிய இளைஞர் கைது!”

ஏஐயில் காதலியை உருவாக்கி, அதனுடன் குடும்பம் நடத்தி தனிமையில் வாழ்ந்து வந்த ஒரு இளைஞரின் வினோதச் சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. இணையம் முழுவதும் ஏஐ மோகம் பரவி வரும் நிலையில், அதை தவறாகப் பயன்படுத்தி விரும்பத்தகாத செயல்களும் நடைபெற்று வருகின்றன.

அப்படி சென்னையைச் சேர்ந்த ஒரு இளம்பெண், தனது புகைப்படங்களை ஏஐ மூலம் தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சம்பந்தப்பட்ட இளைஞரை போலீசார் கைது செய்து, அவரது கணினியை ஆய்வு செய்தபோது அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

அந்த இளைஞர், தன் ஒருதலைப் பிரியமாக காதலித்த பெண்ணை ஏஐ மூலம் உருவாக்கி, அவளும் தன்னை காதலிப்பது போல் புகைப்படங்களும் வீடியோக்களும் தயாரித்திருந்தார். பின்னர், அந்த ஏஐ உருவத்துடன் திருமணம் செய்து, குழந்தை பெற்று குடும்ப வாழ்க்கை நடத்தும் நிலைக்கும் சென்றுள்ளார்.

மேலும், அந்த ஏஐ வீடியோக்களைத் தனது நண்பர்களுக்கும் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலைமையை விளக்கி, இனி இதுபோன்ற செயல்கள் நடைபெறாதவாறு கடுமையான தண்டனை வழங்குமாறு நீதிமன்றத்தில் வாதாடினர். பின்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில் “ஏஐ காதல் இளைஞர்” சிறையில் அடைக்கப்பட்டார்.