Home Uncategorized “Bird Flu: பயப்பட வேண்டிய வைரஸா, புரிந்துகொள்ள வேண்டிய வைரஸா?”

“Bird Flu: பயப்பட வேண்டிய வைரஸா, புரிந்துகொள்ள வேண்டிய வைரஸா?”

H5N1 ஏவியன் இன்புளுவென்சா என்பதைக் கேட்டவுடனே பலருக்கு ஒரு பெரிய பயம் வரும். ஆனால் உண்மையில் இது என்ன, நமக்கு எவ்வளவு ஆபத்து, எதை கவனிக்க வேண்டும் என்பதைக் தெரிந்துகொண்டால் அந்த பயம் தேவையற்றது என்பதை புரிந்துகொள்ளலாம்.

H5N1 என்பது Influenza A குடும்பத்தைச் சேர்ந்த ஒரு RNA வைரஸ். இது இயற்கையாகவே பறவைகளில், குறிப்பாக வனப் பறவைகள் மற்றும் வாத்துகளில் நீண்ட காலமாக இருக்கிறது.

இந்தப் பறவைகளுக்கு பெரும்பாலும் எந்த அறிகுறியும் தெரியாது. ஆனால் அவை அந்த வைரஸை கோழிப் பண்ணைகளுக்கு கொண்டு வந்துவிடும்.

அங்கு ஒரே இடத்தில் அதிகமான கோழிகள் இருக்கும்போது வைரஸ் வேகமாக பரவி, சில நேரங்களில் மிகவும் ஆபத்தானதாக மாறுகிறது. இப்படி mutation மற்றும் reassortment மூலம் தான் H5N1 போன்ற high pathogenic வகைகள் உருவாகின்றன.

இந்த வைரஸ் முதன்மையாக பறவைகளை தான் தாக்கும். கோழிகளில் திடீர் மரணம், சோர்வு, முட்டை உற்பத்தி குறைவு போன்றவை தெரியும். மனிதர்களில் இது மிகவும் அரிதாக தான் தாக்கும்.

நோயுற்ற அல்லது இறந்த பறவைகளுடன் நேரடியாக நெருக்கமான தொடர்பு இருந்தால் மட்டுமே மனிதர்களுக்கு தொற்று ஏற்படும். அப்படித் தாக்கினால் அதிக காய்ச்சல், இருமல், சுவாச சிரமம், சில rare cases-ல் நுரையீரல் பாதிப்பு அல்லது மூளை தொடர்பான பிரச்சினைகள் கூட வரலாம்.

ஆனால் மனிதரிடமிருந்து மனிதருக்கு தொடர்ந்து பரவும் திறன் இந்த வைரஸுக்கு இன்னும் இல்லை என்பதே மிக முக்கியமான விஷயம்.

பலர் நினைப்பது போல இது காற்றில் நீண்ட நேரம் மிதந்து எல்லாருக்கும் பரவும் வைரஸ் அல்ல. வெயில், உலர்ந்த சூழல், வெப்பம் ஆகியவற்றில் இது சீக்கிரமே செயலிழந்து விடும்.

அதனால் இந்தியா போன்ற வெப்பமான நாடுகளில் இதன் spread இயற்கையாகவே கட்டுப்படுகிறது. மேலும் 70 டிகிரி செல்சியஸ் வெப்பத்திற்கு மேலே சில நிமிடங்களில் இந்த வைரஸ் முழுவதுமாக அழிந்து விடுகிறது.

அதனால் நன்றாக வேகவைத்த கோழி அல்லது முட்டை சாப்பிடுவதால் bird flu வராது என்பது அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்பட்ட உண்மை.

இந்தியாவையும் குறிப்பாக தமிழ்நாட்டையும் எடுத்துக்கொண்டால், பொதுமக்களுக்கு உள்ள real risk மிகவும் குறைவு. இங்கு பெரும்பாலானவர்கள் raw அல்லது half-cooked chicken சாப்பிடுவதில்லை.

மேலும் ஒரு outbreak வந்தாலே அரசு தரப்பில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் — பாதிக்கப்பட்ட பகுதியை கட்டுப்படுத்துதல், பறவைகளை culling செய்வது, live bird movement-ஐ நிறுத்துவது,

மனிதர்களில் காய்ச்சல் கண்காணிப்பு போன்றவை. இதனால் பறவைகளிலேயே பிரச்சினை முடங்கிவிடுகிறது; மனிதர்களுக்கு பரவுவதற்கு முன்பே chain break ஆகிறது.

அதிக கவனம் தேவைப்படுபவர்கள் என்றால், கோழிப் பண்ணைகளில் வேலை செய்வோர், வீட்டில் backyard poultry வளர்ப்போர், live bird market-ல் பணிபுரிவோர் தான்.

இவர்கள் sick அல்லது dead birds-ஐ கையால் தொடாமல் இருப்பது, சுத்தம் மற்றும் பாதுகாப்பு முறைகளை கடைபிடிப்பது அவசியம். பொதுவாக market-ல வாங்கி நன்றாக சமைத்து சாப்பிடும் மக்களுக்கு bird flu என்பது ஒரு poultry industry problem தான், public health emergency அல்ல.

மீடியாவில் bird flu என்றால் உடனே “chicken சாப்பிடாதீங்க” என்று செய்திகள் வரும். அது உண்மையில் அறிவியல் ஆதாரம் இல்லாத hype. உண்மையான ஆபத்து வைரஸைப் பற்றிய பயம் அல்ல; அதை பற்றிய தவறான தகவல்கள் தான்.

H5N1 இன்னும் மனிதர்களிடையே பரவ கற்றுக்கொள்ளாததால், இந்தியா போன்ற நாடுகளில் இது pandemic ஆக மாற வாய்ப்பு தற்போது மிகவும் குறைவு.

சுருக்கமாகச் சொன்னால், H5N1 ஆபத்தான வைரஸ் தான், ஆனால் பயப்பட வேண்டிய அளவுக்கு அல்ல. அலட்சியம் செய்யக்கூடாத அளவுக்கு மட்டும். சரியான தகவல், சுத்தம், மற்றும் சாதாரண முன்னெச்சரிக்கைகள் இருந்தாலே இது நம்ம வாழ்க்கையில் பெரிய அச்சுறுத்தலாக மாறாது.