ஒரு நாட்டுக்கே ஜாக்பாட் அடித்தது போன்ற ஒரு பிரம்மாண்ட புதையல். அதுவும் 1400 ஆண்டுகள் பூமிக்கு அடியில் புதைந்து கிடந்த பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள புதையல் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதையலுக்கு பின்னால் இருக்கும் வர்மம் என்ன? அது எப்படி தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது? வாருங்கள் கால பயணத்தில் இறங்கி அந்த மர்மத்தை விளக்குவோம்.
இஸ்ரேலில் உள்ள கலிலி கடலுக்கு அருகில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு நம்ப முடியாத புதைகளை கண்டுபிடித்துள்ளனர். சுமார் 1400 ஆண்டுகளுக்கு முந்தைய பைசன்டைன் பேரரசு காலத்தை சேர்ந்த இந்த புதையலில் கண்ணை பறிக்கும் 97 தூய தங்க நாணயங்கள் இருந்திருக்கின்றன அதுமட்டுமல்ல முத்துக்கள், விலை உயர்ந்த கற்கள் மற்றும் கண்ணாடியால் செய்யப்பட்ட காதனிகள் என பல ஆபரணங்களும் அதனுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஹிப்போஸ் எனப்படும் ஒரு பழங்கால தொல்பொருள் தளத்தில்தான் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. ஆனால் இது திட்டமிட்டு நடந்த அகழ்வாராய்ச்சியில் கிடைக்கவில்லை என்பதுதான் இதில் இருக்கும் சுவாரசியமே. எடிலிப்ஸ் மேன் என்ற நிபுனர் அந்த பகுதியில் இரண்டு பழைய சுவர்களுக்கு அருகே ஒரு பெரிய பாராங்கலை கடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர் கையில் இருந்த மெட்டல் டிடெக்டர் திடீரென பீப் பீப் என இடைவிடாமல் ஒழிக்க தொடங்கியது. ஆரம்பத்தில் அங்கே அப்படி ஒன்றும் மதிப்பு மிக்க பொருள் இருக்காது என்றுதான் அவர் நினைத்தார். ஆனால் மெஷின் தொடர்ந்து ஒளித்ததால் சந்தேகத்துடன் அந்த இடத்தை தோண்டி பார்த்தார். அங்கே அவர் கண்ட காட்சி அவரை பிரமிக்க வைத்தது.
ஆம் ஒன்றன் பின் ஒன்றாக தங்க நாணயங்கள் வெளிவர தொடங்கின. என்னால் நம்பவே முடியவில்லை. அந்த மெஷின் ஒருவித வெறியில் ஒளித்தது போல இருந்தது. தங்க நாணயங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன என்று அவர் தனது அனுபவத்தை ஆச்சரியத்துடன் பகிர்ந்து கொண்டார்.
இந்த நாணயங்களை ஆய்வு செய்தபோது ஆராய்ச்சியாளர்களுக்கு மேலும் பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. இந்த நாணயங்கள் பைசன் இன் பேரரசர்களான ஜஸ்டின் ஒன்று முதல் ஹெராக்லியஸ் வரையிலான பலரின் ஆட்சி காலத்தில் அச்சிடப்பட்டவை.
சில நாணயங்களில் துணியின் மிச்சங்கள் ஒட்டிஇருந்தன. இதிலிருந்து அந்த புதையல் ஒரு துணிப்பையில் வைத்து மிக கவனமாக புதைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. அதைவிட ஆச்சரியம் என்னவென்றால் 1400 ஆண்டுகள் கடந்தும் அந்த நாணயங்கள் அனைத்தும் சற்று முன்பு தான் நாணய சாலையில் இருந்து புதிதாக அச்சடித்து எடுத்தது போல பள்ளபளப்பாக இருந்தன. இதில் ஒரு நாணயம் மிகவும் அரிதானது என கூறப்படுகிறது.
அது பேரரசர் போகாசுக்கு எதிராக தளபதி ஹெராக்லியஸ் ஒரு கிளர்ச்சியை நடத்திய போது சைப்ரஸ்ல அச்சியிடப்பட்ட நாணயமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த ஒரு சிறு நாணயம் அந்த நேரத்தில் அரசியல் வரலாற்றின் ஒரு முக்கிய அத்தியாயத்தையே நமக்கு காட்டுகிறது.
வரலாற்று ஆய்வாளர்கள் சொல்வது என்னவென்றால் ஏழாம் நூற்றாண்டில் ஹிப்போஸ் பகுதி மிகவும் பதச்சமான நிலையற்ற பகுதியாக இருந்திருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து ராணுவ படையெடுப்புகள் அடிக்கடி நடந்திருக்கின்றன. அந்த படையெடுப்புகளில் இருந்து தங்கள் சொத்துக்களை பாதுகாப்பதற்காக யாரோ ஒரு செல்வந்தர் தனது விலை மதிப்பற்ற இந்த புதையலை பூமிக்கு அடியில் பத்திரமாக புதைத்து வைத்திருக்க வேண்டும்.
ஆனால் துரதிஷ்டவசமாக அதை திரும்ப எடுக்க அவரால் முடியாமலேயே போயிருக்கலாம். இன்று 1400 ஆண்டுகளுக்கு பிறகு அந்த மர்ம புதையில் அந்த நேரத்தில் மக்களின் வாழ்க்கை பொருளாதாரம் மற்றும் அரசியல் வரலாற்றை பற்றிய பல அரிய தகவல்களை நமக்கு அள்ளி கொடுத்திருக்கிறது.








