Home உலகம் “பெரிய நிலநடுக்கம் வரக்கூடும்: ஜப்பான் கடும் சுனாமி அபாயத்தில்!”

“பெரிய நிலநடுக்கம் வரக்கூடும்: ஜப்பான் கடும் சுனாமி அபாயத்தில்!”

ஜப்பானில் விரைவில் 100 அடி உயரம் கொண்ட சுனாமி அலைகள் ஏற்படலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பசிபிக் பெருங்கடலின் கரையில் அமைந்துள்ள ஜப்பான், உலகிலேயே அதிக நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாக உள்ளது. இது பசிபிக் நெருப்பு வளயம் என்று அழைக்கப்படுகிறது.

நான்கு பெரிய மற்றும் பல சிறிய டெக்டோனிக் தட்டுகளின் சந்திப்பில் ஜப்பான் அமைந்துள்ளது. இந்த டெக்டோனிக் தட்டுகள் தொடர்ந்து ஒன்றோடொன்று அடிக்கடி மோதி கொள்வதால், ஜப்பான் அமைந்துள்ள பகுதியில் அடிக்கடி பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.

பல நூற்றாண்டுகளாகவே ஜப்பான் மக்கள் இந்த நிலநடுக்கங்களுக்கு ஏற்ப வாழ பழகிக் கொண்டுள்ளனர். ஏனினும் நிலநடுக்கங்களால் அங்கு உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்கிறது. அதிலும், நிலநடுக்கங்களால் ஏற்படும் சுனாமிகள் ஜப்பானில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

கடந்த 2011ஆம் ஆண்டு, ரிட்டர் அளவில் 9.1 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் 133 அடிகள் வரை உயரம் கொண்ட சுனாமி அலைகள் ஜப்பானை தாக்கின.

இந்த பேரழிவில் சுமார் 19,000 பேர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டிலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சுனாமி அலைகள் ஜப்பானை தாக்கின.

ஆனால் அப்போது அலைகள் சிறிய அளவில் இருந்ததால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. இதனிடையே, ஜப்பானில் அடுத்து ஏற்படும் நிலநடுக்கத்தாலும், சுனாமி காரணமாக சுமார் 2 லட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என்று ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த திங்கள்கிழமை ஜப்பானில் 7.5 ரெக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதைவிட பெரிய அளவு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட அறிக்கையில், நிலத்தட்டுகளின் நகர்வு காரணமாக அடுத்து ஏற்படும் நிலநடுக்கம் ரெக்டர் அளவில் 8 புள்ளிகளை தாண்டலாம் என்றும், இதனால் 98 அடி உயரம் கொண்ட சுனாமி அலைகள் ஜப்பானை தாக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் கிழக்கு ஜப்பானில் மட்டும் 2 லட்சம் பேர் உயிரிழக்கலாம், மேலும் ஏராளமானோர் பாதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை குறிப்பிட்டு பேசிய ஜப்பான் பிரதமர் சாணை தகைச்சி, பொதுமக்கள் தயவுசெய்து ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் மற்றும் உள்ளூர் அரசாங்கங்களின் தகவல்களை கவனமாகப் படிக்கவும் என்று கூறியுள்ளார்.

மேலும், நிலநடுக்கம் ஏற்பட்டால் உடனடியாக வெளியேற தயாராக இருக்க வேண்டும் என்றும், உங்கள் உயிருக்கான பொறுப்பை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் விரைவாக செயல்பட அறிவுறுத்தியுள்ளார். இதனால் ஜப்பான் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.