Home உலகம் “அமெரிக்க வட்டி விகித முடிவு இன்று – தங்க விலைக்கு உலகம் காத்திருப்பு”

“அமெரிக்க வட்டி விகித முடிவு இன்று – தங்க விலைக்கு உலகம் காத்திருப்பு”

தங்கம் வாங்குற பிளான்ல இருக்கீங்களா? இல்ல ஏற்கனவே வாங்கி வச்ச தங்கத்தோட விலை என்ன ஆகுமோன்னு கவலையா இருக்கா? உங்க எல்லா கேள்விக்கும் பதில் சொல்ல போற ஒரு முக்கியமான நாள்தான் இன்னைக்கு.

இன்னும் சில மணி நேரத்துல அமெரிக்கா எடுக்க போற ஒரே ஒரு முடிவு. தங்கத்தோட தலை எழுத்தையே மாத்தி எழுத போகுது. ஆமாங்க தங்கத்தோட விலை விண்ணை தொடுமா? இல்ல கொஞ்சம் கீழ இறங்கி நமக்கு நிம்மதி கொடுக்குமாங்கிறது இன்னைக்கு ராத்திரி தெரிஞ்சிடும்.

வாங்க என்ன நடக்க போகுதுன்னு விரிவா பார்க்கலாம். நாம எல்லாருமே பார்த்துட்டுதான் இருக்கோம். கடந்த சில காலமாவே தங்கத்தோட விலை தாறுமாறா ஏறிட்டு இருக்கு.

குறிப்பா அமெரிக்க அதிபரா டிரம்ப் வந்த பிறகு விலை எங்கேயோ போயிடுச்சு. ஒரு சவரன் தங்கம் வாங்கணும்னா நம்ம பட்ஜெட் தாங்குமான்னு யோசிக்கிற அளவுக்கு நிலைமை மாறிடுச்சு.

நேற்றைய நிலவரப்படி சென்னையில ஒரு சவரன் ஆபரண தங்கும் ₹560 உயர்ந்து 82,240க்கு விற்பனை செய்யப்பட்டிருக்கு. ஒரு கிராம் தங்கம் ₹,10,280 நினைத்து பார்க்கவே தலை சுத்துது இல்லையா? இந்த விலைஉயர்வுக்கு காரணம் என்னன்னு கேட்டீங்கன்னா உலகம் முழுவதும் நிலவுர பதற்றமான சூழல்தான்.

ஒரு பக்கம் அமெரிக்காவுக்கும் மற்ற நாடுகளுக்கு இடையிலான மோதல். இன்னொரு பக்கம் ரஷ்யா உக்ரைன் போர். இதுக்கு நடுவுல மத்திய கிழக்குல நடக்கிற பிரச்சனைகள் எல்லாமே சேர்ந்து தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடா மாத்திருச்சு. இதனாலதான் விலையும் ராக்கெட் வேகத்துல ஏறி கி ட்டு இருக்கு.

சரி இப்ப மெயின் விஷயத்துக்கு வருவோம். இன்னைக்கு என்ன அந்த முக்கியமான முடிவு? அமெரிக்காவோட மத்திய வங்கி அதாவது பெடரல் ரிசர்வ்வோட இரண்டு நாள் கூட்டம் இன்னையோட முடியுது.

இந்த கூட்டத்தோட கடைசியில அவங்க வட்டி விகிதம் பத்தின ஒரு முக்கிய முடிவை அறிவிப்பாங்க. இப்போ அமெரிக்க வட்டி விகிதம் 4.25% முதல் 4.5% வரை இருக்கு.

இந்த வட்டி விகிதத்தை குறைக்கலாமா வேண்டாமாங்கிறதுதான் இப்போ மில்லியன் டாலர் கேள்வி. இங்குதான் ஒரு சின்ன ட்விஸ்ட் இருக்கு. ஒருவேளை அமெரிக்கா மத்திய வங்கி வட்டிய குறைச்சா மக்கள் பேங்கில் பணம் போடுறத விட தங்கத்துல முதலீடு செய்ய விரும்புவாங்க. இதனால தங்கத்தோட விலை கிடுகிடுன்னு ஏறும்.

ஒருவேளை வட்டியை குறைக்காம அப்படியே வச்சிருந்தா தங்கத்தோட விலை கொஞ்சம் குறைய வாய்ப்பு இருக்கு. அப்போ என்னதான் நடக்கும்? இப்போ இருக்கற சூழலை பார்த்தா வட்டி விகிதத்தை குறைக்கத்தான் அதிக வாய்ப்பு இருக்கு.

ஏன்னா சமீபத்தில வெளியான அமெரிக்க வேலை வாய்ப்பு அறிக்கை அவ்வளவு திருப்திகரமா கிடையாது. பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு வர வட்டியை குறைச்சே ஆகணும்னு ட்ரம்ப் தரப்பில இருந்து கடுமையான அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

யோசிச்சு பாருங்க. ஒருவேளை அவங்க 0.25% வட்டி விகிதத்தை குறைச்சா, தங்கம் விலை கணிசமா உயரும். ஒருவேளை அதிரடியா 0.5% குறைச்சிட்டாங்கன்னா தங்கம் விலை ராக்கெட்ல பறக்குறத யாராலயும் தடுக்க முடியாது. ஆனா பணவிக்கத்தை கட்டுப்படுத்தணும்னு நினைச்சு வட்டியை குறைக்காம விட்டா தங்கம் வாங்குறவங்களுக்கு அது ஒரு நல்ல செய்தியா அமையும்.

ஆனா அதுக்கான வாய்ப்பு ரொம்ப ரொம்ப குறைவுதான்,. இந்த அத்தனை பரபரப்புக்கும் விடை தெரியிற நேரம் நெருங்கிடுச்சு. அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் இந்திய நேரப்படி இன்று இரவு சரியா 11:30 மணிக்கு செய்தியாளர்களை சந்திச்சு இந்த முடிவை அறிவிக்க போறாரு.

அந்த ஒரு அறிவிப்புக்காகதான் மொத்த உலகமுமே காத்துக்கிட்டு இருக்கு. தங்கத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும் அந்த சில மணி நேரங்களுக்காக நாமும் காத்திருப்போம்.