அமெரிக்க வெள்ளை மாளிகையின் நுழைவு வாயிலில் ஒரு கார் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்த சமயம் இந்த சம்பவம் நடந்ததால் பாதுகாப்பு அமைப்புகள் அவசர நிலைக்கு மாற்றப்பட்டன.
இந்த சம்பவத்துக்கு ஒருபக்கம், மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவமும் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மிகக் கடுமையான பாதுகாப்பு கொண்ட பகுதியாகும். நவீன பாதுகாப்பு உபகரணங்களுடன், துப்பாக்கி ஏந்திய போலீசார் எப்போதும் காவல்பணியில் உள்ளனர். அலுவலக நேரங்களில் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருக்குவது வழக்கமானது.
சமீபத்தில், வெள்ளை மாளிகை நோக்கி அதிவேகத்தில் வந்த கார் ஒன்று பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த தடுப்புகளில் மோதியது. இதையடுத்து, காரை ஓட்டிய நபரை போலீசார் சுற்றிவளைத்து கைதுசெய்தனர். உடனடியாக கூடுதல் போலீஸ் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இதற்கிடையில், வெள்ளை மாளிகைக்கு அருகே மற்றொரு நபர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த சூட்டில் மேற்கு வெர்ஜீனியாவைச் சேர்ந்த தேசிய காவல்படை வீரர்கள் இருவர் பலத்த காயமடைந்தனர். இருவரும் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த்வர் என தெரியவந்துள்ளது. ஏற்கனவே வெள்ளை மாளிகை மீது கார் மோதிய சம்பவம் அடங்காத நிலையில், இப்போது துப்பாக்கிச் சூடு சம்பவமும் நடந்ததால் பாதுகாப்பு துறையில் சிறிய பதற்றம் உருவாகியுள்ளது.
இது குறித்து பேசிய அதிபர் டிரம்ப், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும், காயமடைந்த வீரர்களை கடவுள் ஆசீர்வதிப்பாராக என்றும் தெரிவித்தார். தொடர்ந்து அவர், பாதுகாப்பு படை அதிகாரிகள் உண்மையில் சிறந்த மனிதர்கள், அமெரிக்க அதிபராக நான் எப்போதும் உங்களுடன் நிற்பேன் என்றும் கூறினார்.








