அமெரிக்காவுக்கு பயணம் செய்ய படிக்க அல்லது வேலை பார்க்க திட்டமிட்டுருக்கீங்களா? அப்போ இந்த அதிர்ச்சியான செய்தியை கேளுங்க.
அமெரிக்க அரசு விசா வழங்குறதுக்கான விதிமுறைகளை மிக கடுமையாக்கி இருக்காங்க. குறிப்பாக இந்திய விண்ணப்பதாரர்கள் பயன்படுத்தி வந்த ஒரு குறுக்கு வழிக்கு இப்போ முற்று புள்ளி வைக்கப்பட்டிருக்கு.
இனி அமெரிக்கா விசா வாங்குறது இன்னும் கடினமாக போகுது. வாங்க இந்த புதிய விதிமுறைகள் என்ன? இதனால நமக்கு என்ன பாதிப்புன்னு முழுசா பார்க்கலாம்.
அமெரிக்க வெளியுறவுதுறை ஒரு புதிய கடுமையான விதியை கொண்டு வந்திருக்காங்க. அதன்படி இனிமேல் குடியேற்றம் அல்லாத விசா அதாவது ஸ்டூடன்ட், விசா, பிசினஸ் விசா, டூரிஸ்ட் விசா, வேலைக்கான விசா வாங்குறவங்க தங்களோட சொந்த நாட்டுல இருக்கற அமெரிக்க தூதரகத்துல மட்டும்தான் இன்டர்வியூக்கு அப்பாயிண்ட்மென்ட் புக் பண்ண முடியும்.
சரி இதனால என்ன பெரிய பாதிப்புன்னு நீங்க கேட்க்லாம். இதுவரைக்கும் நம்ம இந்தியால விசா இன்டர்வியூக்கு அப்பாயிண்ட்மென்ட் கிடைக்க ரொம்ப நாள் ஆகும். சில சமயம் ரெண்டு மூணு வருஷம் கூட ஆகி இருக்கு.
இதனால நம்ம இந்தியர்கள் ஒரு சூப்பரான குறுக்கு வழியை பயன்படுத்துனாங்க. அதுக்கு பேர்தான் விசா ரன். அதாவது தாய்லாந்து, சிங்கப்பூர், ஜெர்மனின்னு எந்த நாட்டுல விசா இன்டர்வியூ அப்பாயிண்ட்மென்ட் சீக்கிரம் கிடைக்குதோ அந்த நாட்டுக்கு டூரிஸ்ட் மாதிரி போய் அங்கேயே அமெரிக்கா விசா இன்டர்வியூவ முடிச்சுட்டு வந்துடுவாங்க.
ஆனா இப்போ கொண்டு வந்திருக்கிற இந்த புதிய விதிமுறையான இந்த விசா ரன் என்ற குறுக்கு வழிக்கு ஒரு முற்று புள்ளி வைக்கப்பட்டிருக்கு. இந்தியர்களுக்கு என்ன பாதிப்பு? இனிமேல அமெரிக்கா விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்கள்.
இந்தியாவில்தான் வரிசையில நின்றாக வேண்டும். இப்போதைய நிலவரப்படி பிசினஸ் அல்லது டூரிஸ்ட் விசா இன்டர்வியூக்கு ஹைதராபாத் மும்பைில மூன்றரை மாசமா சென்னையில் ஒன்பது மாசம் வரையிலும் காத்திருக்க வேண்டி இருக்கு.
இந்த காத்திருப்பு நேரம் இனிமேல் இன்னும் அதிகமாகலாம். வேறு என்னென்ன மாற்றங்கள் வந்திருக்குன்னு பார்த்தோம்ன்னா, நேர்காணல் கட்டாயம் அப்படின்னு சொல்றாங்க.
இனி 14 வயசுக்கு உட்பட்ட குழந்தைகள் 79 வயசுக்கு மேற்பட்ட பெரியவங்க உட்பட கிட்டத்தட்ட எல்லாருமே நேர்ல விசா இன்டர்வியூக்கு வரணும்னு விதியை கடுமையாக்கி இருக்காங்க.
விதி விலக்குகன்னு பார்த்தோம்னா ஒரு நாட்டுல அமெரிக்க தூதரகம் செயல்படாத பட்சத்துல அந்த நாட்டு மக்களுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. உதாரணத்துக்கு ரஷ்யர்கள், கஜகஸ்தானிலும், ஆப்கானியர்கள், பாகிஸ்தானிலும் விண்ணப்பிக்கலாம்.
ஆனா இந்த விதி விலக்கு இந்தியாவுக்கு பொருந்தாது அப்படின்னு சொல்லிட்டாங்க. டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் விசா விதிகள் தொடர்ந்து கடுமையாக்கப்பட்டு வருது.
அதுல இது ஒரு லேட்டஸ்ட் அப்டேட். மொத்தத்துல அமெரிக்காவுக்கு பயணம் செய்ய திட்டமிடும் இந்தியர்களுக்கு. இனி காத்திருப்பு நேரமும் சிக்கல்களும் அதிகரிக்க போகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.








