Home உலகம் ஒரே இரவில் இடிந்த வீடுகள்… 622 பேர் பலியாகிய ஆப்கானிஸ்தானின் பேரழிவு”

ஒரே இரவில் இடிந்த வீடுகள்… 622 பேர் பலியாகிய ஆப்கானிஸ்தானின் பேரழிவு”

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 622 பேர் பலியாகி இருப்பதாக ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்திருக்கிறது.

ஆப்கானிஸ்தான் மிக மோசமான ஒரு இயற்கை பேரிடரை இன்று காலை சந்தித்திருக்கிறது. இன்று அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் கிழக்கு ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாந்த நிலநடுக்கத்தில் 622 பேர் பலியாகி இருப்பதாக ஆப்டர் நாட்டினுடைய இன்டீரியர் மினிஸ்ட்ரி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக ஒன்றாக இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி இருந்தது தொடர்ந்து இந்த நிலநடுக்கத்தில் 250க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் கிடைத்த நிலையில் அது 250 அல்ல அது தற்போது 622 என அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாகவே தெரிவித்திருக்கிறது.

மேலும் இந்த நிலநடுக்கத்தில் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் ஆப்கான் நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கின்றது. குறிப்பாக இதற்கு முன்பும் கூட ஆப்கானிஸ்தான் பல நிலநடுக்கத்தை சந்தித்திருக்கிறது.

ஒரு இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் இத்தகைய ஒரு மிகப்பெரிய ஒரு இழப்பு என்பது ஏற்பட்டது. அதன் பிறகு ஒரு மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மிகவும் சக்தி வாய்ந்த ஒரு நிலைநடுக்கம் என்பது ஏற்பட்டிருக்கின்றது.

குறிப்பாக அங்கு மலைப்பகுதியை ஒட்டி அமைந்திருக்கக்கூடிய பல வீடுகளின் கட்டுமானங்கள் மண்ணால் செய்யப்பட்ட வீடுகள். எனவே அந்த மண்ணால் செய்யப்பட்ட பல வீடுகள் மிகுந்த சேதத்திற்கு உட்படுத்தப்பட்டு அதில் வசிக்கக்கூடிய மக்கள் பலர் பலியாகி இருக்கின்றனர்.

தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக அரசாங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பலர் மருத்துவமனையிலே உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருவதால் ஒரே பதற்றமான சூழல் அங்கு காணப்படுகிறது.