செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்ததற்கான சாத்தியங்களை நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் கண்டறிந்துள்ளது. உலக விஞ்ஞான உலகத்தை ஆச்சரியப்பட வைத்துள்ள இந்த கண்டுபிடிப்பு செவ்வாயில் நீர் மற்றும் உயிர் மூலக்கூறுகள் இருப்பதற்கான தடையத்தை தரவுகள் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளது.
செவ்வாய் நமது சூரிய குடும்பத்தின் பூமிக்கு அடுத்ததாக சூரியனை சுற்றி வரும் சிவப்பு கோள். ஓரளவுக்கு பூமியை போன்ற பண்புகளை கொண்டுள்ளதால் பூமியும் செவ்வாயும் இரட்டை கோள்கள் என அழைக்கப்படுகிறது.
பூமிக்கு மிக அருகில் உள்ள கிரகம் என்பதாலும் சிவப்பு நிறத்தில் வானில் மின்னுவதாலும், பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் வெற்றுக்கண்ணால் செவ்வாயை பார்த்து புராணங்களில் நாயகனாகவும் கடவுளாகவும் தமது அன்றாட வாழ்வில் இணைத்து கொண்டனர்.
16ஆம் நூற்றாண்டில் கலிலியோ டெலஸ்கோப் வழியே செவ்வாயை பார்த்த போதிலிருந்து, தற்போது வரை செவ்வாய் கிரகத்தில் என்ன இருக்கிறது என்பதை அறிய பல நாடுகளும் அறிவியலாளர்களும் முயற்சித்து அதில் குறிப்பிட்ட முன்னேற்றங்களை அடைந்து வருகிறார்கள்.
1965ஆம் ஆண்டு அமெரிக்காவின் மரைனர் போர் விண்கலங்கள் செவ்வாயை அருகில் சென்று புகைப்படம் எடுத்த நிலையில், அந்த புகைப்படத்திலேயே செவ்வாயின் மேற்பரப்பில் பூமியை போன்று ஆறுகளும் கணவாய்கள் மலைகளும் இருப்பது கண்டறியப்பட்டு, செவ்வாய் மீது ஆர்வத்தை அதிகப்படுத்தியது.
அதன் பின்னர் நாசாவின், சோஜர்னர், ஸ்பிரிட், பெர்சவரன்ஸ் ஆகிய விண்கலங்களின் ரோவர்கள் செவ்வாய் மேற்பரப்பில் ஊர்ந்து வந்து இதுவரை நாம் காணாத செவ்வாயின் உலகத்தை வெளிக்கொண்டு வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தின.
இந்நிலையில்தான் 2021ஆம் ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் பண்டைய நுண்ணுயிர்களின் வாழ்க்கைக்கான சாத்தியமான சான்றுகளை கண்டறிந்துள்ளது.
ஜீரோ கிராட்டர் எனும் பண்டையை ஏறி படுகையில் இருந்து சோயா பால்ஸ் என அழைக்கப்படும் பாறையில் சேகரிக்கப்பட்ட மாதிரியில் செப்பர்கன்யான் எனும் கல்லில் சாத்தியமான உயிரியல் கையோப்பங்கள் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பெர்சவரன்ஸ் கருவிகள் பாறையின் உட்பகுதியில் வண்ணமயமான புள்ளிகளை கண்டனர். அதற்கு லியோபார்ட்ஸ்பாட்ட்ஸ் என்று நாசா பெயரிட்டது. அந்த பாறையில் இரும்புச் சத்து நிறைந்த இரண்டு கனிமங்கள் உள்ளன.
ஹைட்ரேட்டட் அயன் பாஸ்பேட் மற்றும் அயன் சல்பேட் என்பவை, பூமியில் பொதுவாக சதுப்பு நிலங்கள் மற்றும் கரிம பொருட்கள் உருவாகும் விதமாகவே உள்ளன, அல்லது சில நுண்ணுயிரிகளின் செயலால் உருவாகலாம்.
இந்த பாறைகளில் கரிம கார்பன், கந்தகம், பாஸ்பரஸ் மற்றும் துருபோல் ஆக்சிடைஸ் இரும்பு போன்றவை செழித்து காணப்படுகின்றன. இந்த வேதியல் கலவைகள் நுண்ணுயிர்களுக்கு தேவையான ஆற்றல் ஆதாரமாக இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
இது செவ்வாயில் வாழ்க்கை இருப்பதை நெருக்கமாக சுட்டிக்காட்டும் மிகப்பெரிய முன்னேற்றம் என்றும், அதே வேளையில் உறுதிப்படுத்தப்பட்ட பெர்சவரன்ஸ் 27 பாறை மாதிரிகளை பூமிக்கு எடுத்து வர வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
செப்டம்பர் எட்டாம் தேதி நேச்சர் இதழில் வெளியான கட்டுரையை நாசா வெளியிட்டபோது, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்தார். பெர்சவரன்ஸ் ரோவர் சேகரித்த மாதிரிகள் எதிர்காலத்தில் நாசாவின் மார்ஸ் சாம்பிள் ரிட்டன் மிஷன் மூலம் பூமிக்கு கொண்டுவரப்பட்டால் மிக துல்லியமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.
இவ்வளவு நாட்களாக நமது அண்டை கிரகமான செவ்வாயில் நீரோடை இருந்ததற்கான ஆதாரம் கண்டறியப்பட்ட நிலையில், அதோடு சேர்ந்து உயிர் மூலக்கூறுகள் இருப்பதும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. மனித விண்வெளி வரலாற்றில் இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய கண்டுபிடிப்பு எனவும் இது குறிப்பிடப்படுகிறது.








