Home உலகம் சொந்த நாட்டு மக்களுக்கு எதிரியாக மாறும் டிரம்ப் கலக்கத்தில் அமெரிக்க

சொந்த நாட்டு மக்களுக்கு எதிரியாக மாறும் டிரம்ப் கலக்கத்தில் அமெரிக்க

“அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கையா? இல்லையா?அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய அறிவிப்பால் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு!

அக்டோபர் 1, 2025 முதல் — அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு பிராண்டட் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துக்கும் 100% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஆனால், ஒரு விதிவிலக்கு இருக்கிறது..அந்த மருந்து நிறுவனங்கள் அமெரிக்காவில் தங்களுடைய உற்பத்தி ஆலையை அமைத்தால் — வரி விதிக்கப்படாது. கட்டுமானம் தொடங்கினாலே கூட வரி விலக்கு கிடைக்கும் என்று டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோசியல் மூலம் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பால் யார் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்? இந்தியா! ஏனென்றால், அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் 10 மருந்துகளில் ஒன்று இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. மேலும், இந்திய மருந்து ஏற்றுமதியில் 40 சதவீதம் அமெரிக்காவுக்கு தான் செல்கிறது.

நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள் —இந்த 100% வரி காரணமாக இந்திய மருந்து நிறுவனங்களின் வருவாய் 5 முதல் 10 சதவீதம் குறையலாம். லாபம் குறையும்; போட்டித்தன்மை குறையும்.

ஆனால் இதிலே அமெரிக்க மக்களும் கஷ்டப்பட வாய்ப்பு அதிகம்.மருந்துகளின் விலை ரட்டிப்பாகும் அபாயம், சப்ளை குறைவு, மருந்து தட்டுப்பாடு — எல்லாம் நேரிடலாம். காய்ச்சல் மாத்திரை கூட வாங்க முடியாத நிலை வரக்கூடும் என எச்சரிக்கின்றனர்.

இதற்கிடையில், மருந்துகளோடு சேர்த்து கனரக வாகனங்கள், மெத்தைகள், சமையலறை மற்றும் குளியலறை பொருட்களுக்கும் 100% வரி விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்படின்னா கேள்வி இந்தியா, சீனா, பிற நாடுகளுக்கு தண்டனை விதிக்கிறாரா டிரம்ப்?அல்லது அமெரிக்க மக்களையே தண்டிக்கிறாரா? இந்த கேள்விதான் தற்போது சர்வதேச வட்டாரங்களில் தீவிரமாக பேசப்படுகிறது.”