Home உலகம் வெளியான அதிரடி அறிவிப்பு.! தாய்லாந்தில் இலவச உள்நாட்டு விமான சேவை அறிவிப்பு”

வெளியான அதிரடி அறிவிப்பு.! தாய்லாந்தில் இலவச உள்நாட்டு விமான சேவை அறிவிப்பு”

சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் இலவச உள்நாட்டு விமான பயணத்திற்காக நிதி உதவி வழங்க தாய்லாந்து நாட்டு அரசு முன்வந்துள்ளது.

தாய்லாந்தின் விளையாட்டு மற்றும் சுற்றலா அமைச்சகம் பை இன்டர்நேஷனல் ஃப்ரீ தாய்லாந்து டொமஸ்டிக் பிளைட்ஸ் என்ற திட்டத்தின் கீழ் 700 மில்லியன் டிபி அதாவது இந்திய மதிப்பில் சுமார் 187 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

இந்த திட்டத்தில் தாய் ஏர்வேஸ், பேங்காக் ஏர்வேஸ், தாய் ஏர் ஏசியா, நோக்ஹேர், தாய் லயன் ஏர், தாய் வியர்ஜெட் ஆகிய ஆறு விமான நிறுவனங்கள் இணைந்துள்ளன.

இந்த ஆறு விமான நிறுவனங்களில் டிக்கெட் முன்பதிவு செய்து தாய்லாந்திற்கு வரும் சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கு உள்நாட்டு விமான பயணம் இலவசமாக வழங்கப்படுகிறது.

செப்டம்பர் 2025 தொடங்கி நவம்பர் 2025 வரை இந்த திட்டத்தில் 2 லட்சம் சுற்றுலா பயணிகள் இலவச உள்நாட்டு விமான பயணம் மேற்கொள்ளலாம்.