Home உலகம் “மனிதனால் ஏற்பட்ட பருவநிலை மாற்றம்: தென்கிழக்காசியாவில் தீவிர புயல்களுக்கு காரணம்”

“மனிதனால் ஏற்பட்ட பருவநிலை மாற்றம்: தென்கிழக்காசியாவில் தீவிர புயல்களுக்கு காரணம்”

தென்கிழக்காசிய நாடுகளில் கடந்த சில வாரங்களில் தீவிரமான புயல்கள் உருவானதால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஆய்வுகளின் படி, இது மனிதர்களின் தவறே மூல காரணம் என தெரியவந்துள்ளது. வேர்ல்ட் வெதர் அட்ரிபியூஷன் “World Weather Attribution (WWA)” என்ற அமைப்பின் ஆய்வில், மனிதர்களின் செயல்பாடுகளால் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் கடலின் மேல்பரப்பு வெப்பநிலையில் மாற்றங்களை உண்டாக்கி, தீவிரமான புயல்களுக்கு தூண்டுதலாக அமைந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில், இந்தியப் பெருங்கடலின் வடப்பகுதி வெப்பம் சராசரியை விட 0.2 டிகிரி அதிகரித்ததும், புயல்களின் தீவிரத்தன்மை அதிகரிக்க காரணமாகிவிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புவி வெப்பமாதலால் சாதாரண புயல்களும் மிக மோசமானதாக மாறிவிடும் எனவும் ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

நகர மாயமாக்கள் அதிகம் உள்ள நாடுகளில், மக்கள் அடர்த்தி அதிகமான பகுதிகள் மற்றும் தாழ்வான நிலங்களில் கட்டுமானங்கள் நிறைந்த பகுதிகளே வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

தாய்லாந்து, மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், இலங்கை ஆகிய தென்-தென்கிழக்காசிய நாடுகள் கடந்த சில வாரங்களில் அடுத்தடுத்து புயல்களின் தாக்கத்தை அனுபவித்தன. இதில் 1,600 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் பலத்த மழை காரணமாக ஓடுமாற்றில் வெள்ளம் கரை புரள்கிறது. இரு மேம்பாலங்களை இணைத்து வெள்ளம் ஓடும் காட்சி ட்ரோன் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மழை தொடர்வதால் ஆற்றின் வெள்ளம் மேலும் உயரும் என மாநில நிர்வாகம் எச்சரித்துள்ளது. நீர்மட்டம் உயரும்போது பாலங்களில் போக்குவரத்து நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.