Home உலகம் “இந்தியா மாற்றம் காட்டியுள்ளது” – புதிய வர்த்தக ஒப்பந்தம் வரும் என டிரம்ப் அறிவிப்பு

“இந்தியா மாற்றம் காட்டியுள்ளது” – புதிய வர்த்தக ஒப்பந்தம் வரும் என டிரம்ப் அறிவிப்பு

ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாகக் கூறி, இந்தியா மீது அமெரிக்கா முன்பு கடுமையான வரிவிதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகையில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் பதவியேற்கும் விழா நடைபெற்றது.

அந்த விழாவில் பேசிய டிரம்ப், “ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா பெருமளவு குறைத்துள்ளது. அதனால், ஒரு கட்டத்தில் இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட வரியை குறைக்கும் வகையில் புதிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்,” என்று தெரிவித்துள்ளார்.