பிரான்ஸ் நாட்டில் நீச்சல் குளம் கட்ட குழி தோண்டியவருக்கு தங்க புதையல் கிடைத்திருக்கிறது. அந்நாட்டின் நியூவில்சொர் சவான் என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் தமது வீட்டின் பின்புறத்தில் குழி தோண்டிய போது தங்க கட்டிகள் மற்றும் தங்க நாணயங்களை கண்டெடுத்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்திய மதிப்பில் சுமார் 7 கோடி ரூபாய் விலை கொண்ட அந்த புதையல் பழங்காலத்தை சேர்ந்தவை அல்ல என்று கூறியிருக்கும் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடைபெறுவதாக தெரிவித்தனர்.








