ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் டிசம்பர் 5 மற்றும் ஆறாம் தேதிகளில் இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோதியுடன் சந்திப்பு நிகழ்த்தும் அவர் சுகோய் 57 ரக போர் விமான விற்பனை S400 ஏவுகணைகள் டெலிவரி ஆகியவை குறித்தும் பேச்சு வார்த்தை நடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பின் போது இரு தரப்பிலும் பாதுகாப்பு ,எரிசக்தி, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.








