Home உலகம் “உங்க இதயத்தையே தாக்கும் உணவு – புதிய ஆய்வில் அதிர்ச்சி வெளிப்பாடு!”

“உங்க இதயத்தையே தாக்கும் உணவு – புதிய ஆய்வில் அதிர்ச்சி வெளிப்பாடு!”

இந்தியர்களுக்கு இதய நோய் அதிகம் ஏற்பட என்ன காரணம் என்பது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டு ஆய்வு முடிவுகளும் வெளியிடப்பட்டிருக்கு.

இந்தியா, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 60,000 க்கு மேற்பட்ட மனிதர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் இதயம் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகள் அதிகம் ஏற்பட அதித பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களும் காரணமாக இருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் (University of Cambridge, Britain) பல்கலைக்கழகம், சென்னையின் தி மெட்ராஸ் டயாபடீஸ் ரிசர்ச் பவுண்டேஷன் (The Madras Diabetes Research Foundation) ஆகிய நிறுவனங்களை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்தி உள்ள ஆய்வு முடிவுகள் தி லண்ட்செட் ரீஜனல் ஹெல்த் சவுத் ஈஸ்ட் அண்ட் ஏசியா இதலில் வெளியிடப்பட்டுள்ளது.

அதிக பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களில் சர்க்கரை உள்ளிட்ட பல பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. தொழிற்சாலைகளில் பலக்கட்ட பதப்படுத்துதல் முறைகளை கடந்து அவை இறுதியாக பொட்டனங்களில் அடைக்கப்பட்டு அல்லது வேறு வடிவங்களில் விற்பனைக்கு வருகிறது.

உடல் பருமன் அல்லது இயல்பை விட அதிகமாக உடல் எடை அதிகரித்தல் அன்றாட உடல் இயக்கத்தில் பாதிப்புகள் நீரழிவு பிரச்சனை இவற்றை விட முக்கியம் இதயம் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகள் அதிகம் ஏற்பட இவ்வகை உணவுகள் காரணமாக இருக்கின்றதா ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்

இந்த ஆய்வின் மூலமா ஒரு தனிநபர் எடுத்துக்கொள்ளும் உணவின் மூலம் அவரது உடலுக்கு கிடைக்கும் மொத்த ஆற்றல் 13% அவர் உண்ணும் அதித பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் மூலம் கிடைக்கப்பெறுகிறது என்று தெரிய வந்துள்ளது.

ஆண்களை விட பெண்களே இவ்வகை உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வதாகவும் தெரிய வந்துள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை அதிகம் சாப்பிடுபவர்களை சில பாகுபாடுகளின் அடிப்படையில் பிரித்து பார்க்கும்போது திருமணம் ஆனவர்கள் அல்லது சேர்ந்து வாழ்பவர்கள் இவ்வகை உணவுகளை ஒப்பிட்ட அளவில் குறைவாகவே எடுத்துக் கொள்கின்றனர் என்றும் தெரிய வந்துள்ளது.

ஆகமொத்தம் சிங்கிள் பசங்க என்று சொல்லிக்கொண்டு, திருமணமாகாமல், தனி நபர்களாகவே, பெண்ணாயினும், ஆணாகினும் அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை சாப்பிடுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆறுதலான தகவல் என்னவென்றால், வட இந்தியாவை ஒப்பிடும் போது, தென்னிந்தியாவில் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை எடுத்து கொள்பவர்களின் விகிதம் குறைவாகவே இருப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.