அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்யா மீது கடும் கோபமாகி இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை அவரால் நிறுத்த முடியாததுதான்.
அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிபரானதும் 24 மணி நேரத்தில் போரை நிறுத்துவதாக கூறினார். ஆனால் அதிபராக எட்டு மாதங்கள் கடந்திருக்கும் நிலையில் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
மேலும் நோபல் பரிசு கிடைக்காது என தெரிந்துவிட்டதால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மீது கடும் கோபத்தில் உள்ளார். இதனால் அவர் ரஷ்யா மற்றும் அதன் நட்பு நாடுகளை குறிவைத்து செயல்பட்டு வருகிறார்.
ரஷ்யாவிடம் இந்தியாவும் சீனாவும் நட்பாக உள்ளது. இந்நிலையில் தான் அமெரிக்கா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி 25% வரிவிதித்தார்.
மேலும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி இந்தியாதான் போரை முன்னெடுக்க உதவுகிறது. இதனால் இந்தியாவின் போர் என்று டிரம்ப் விமர்சனம் செய்தார். அதோடு ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்று டிரம்ப் கூறி வருகிறார். ஆனால் அவர் கூறியதை இந்தியா காது கொடுத்து கேட்கவில்லை.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை அதிகரித்தது. இதனால் டென்ஷனாக இருக்கிறார். அது மட்டுமின்றி ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவிற்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் நாட்டோ நாடுகளையும் வரிவிதிக்க வலியுறுத்தி வருகிறார்.
இந்தியாவோ ஐரோப்பிய நாடுகளிடம் தடையற்ற ஒப்பந்தத்தை ஏற்படுத்த பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டு வருகிறது. இது விரைவில் சுமூகமான முடிவு எட்டப்படும் என்ற தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்த நிலையில்தான் அமெரிக்காவுக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அதோடு இந்தியா ரஷ்யா உறவை யாராலும் தொட முடியாது என்று பரபரப்பு அறிக்கை வெளியிட்டது.
இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டடிருக்கும் அறிக்கையில் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை தடுக்க இந்தியாவுக்கு தொடர்ந்து அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது.
இப்போது நாட்டோ மூலமும் அழுத்தம் கொடுக்கிறது. ஆனால் இந்தியா உறுதியான நிலைப்பாடு எடுத்திருக்கிறது. எவ்வளவோ அச்சுறுத்தல் இருந்தும் இந்தியா உறுதியுடன் நிற்கிறது. இந்தியா ரஷ்யா உறவை சிதைக்க நினைக்கும் எந்த ஒரு முயற்சியும் தோல்வியில் தான் முடியும் என எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இந்தியா ரஷ்யா நட்பு பல ஆண்டுகளாக வலிமை அடைந்து வருகிறது. நட்பு கலாச்சாரம் வர்த்தகம் உட்பட பல விஷயங்களில் இந்த நட்பு வேரூன்றி இருக்கிறது. தொடர்ந்து இரு நாட்டின் நலன்களுக்கும் இந்த உறவு முன்னுரிமை அளிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவை எந்த வழியிலும் தடுக்க முடியாமல் , வேறு வழிில்லாமல் இந்தியாவிடம் மீண்டும் வர்த்தக பேச்சு வார்த்தையை அமெரிக்கா முன்னெடுத்திருக்கிறது.
மேலும் நம் நாட்டின் மீது அமெரிக்கா விதித்திருக்கும் 25% கூடுதல் வரி. வரும் நவம்பர் மாதத்திற்குள் விலக்கி கொள்ளப்படலாம் என மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் பிரிட்டனில் பிரதமர் மோடியை டிரம்ப் புகழ்ந்து பேசினார். அப்போது கூறியிருப்பதாவது ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குகின்றன என்பது எனக்கு நன்கு தெரியும். நான் இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமானவன் இந்திய பிரதமர் மோடிக்கும் மிக நெருக்கமானவன்.
நான் அவரிடம் பேசினேன். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தேன். எங்களுக்குள் மிகச் சிறந்த உறவு இருக்கிறது. மிக எளிமையாக சொன்னால் எண்ணெய் விலை குறைந்தால் புத்தின் வெளியேற போகிறார்.
அவருக்கு வேறு வழியே இல்லை. அவர் அந்த போரிலிருந்து வெளியேற போகிறார். உக்ரைன் போரை தீர்ப்பது எளிதானது என நினைத்தேன். புதின் என்னை ஏமாற்றிவிட்டார். இவ்வாறு அதிபர் டிரம்ப் அதில் கூறியிருக்கிறார்.








