உலகின் உயரமான கிளிமஞ்சாரோ மலையின் உஹுரு சிகரத்தை ஏறி சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவனுக்கு நடிகை குஷ்பு பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள கிளிமஞ்சாரோ மலை உலகின் உயரமான சிகரங்களில் ஒன்றாகும். இந்த சிகரத்தை மிக இளம் வயதில் ஏறிய நபர் என்ற சாதனையை விருதுநகரைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் விஷ்ணு படைத்துள்ளார்.
அவருடன் சேர்ந்து ஏழு பேர் உஹுரு சிகரத்தின் உச்சியை அடைந்து சாதனை படைத்தனர். அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது ஹைதராபாத் விமானம் மூலம் சென்னை வந்த நடிகை குஷ்பு, சிறுவனுக்கு அன்பு முத்தம் கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.








