Home உலகம் “வரைபடத்தின் பெயரில் நூற்றாண்டுகளாக நடந்த ஏமாற்றம்… ஆப்பிரிக்கா பேசுகிறது!”

“வரைபடத்தின் பெயரில் நூற்றாண்டுகளாக நடந்த ஏமாற்றம்… ஆப்பிரிக்கா பேசுகிறது!”

உலக வரைப்படத்தை பார்த்து ஆப்பிரிக்கா பெருசா கிரீன்லாந்த் பெருசா அப்படின்னு உங்களை கேட்டா என்ன சொல்லுவீங்க? ஒரே அளவாதானே இருக்கு அப்படின்னு சொல்லுவீங்க. ஆனா இல்ல ஆப்பிரிக்கா கிரீன்லாண்ட விட 14 மடங்கு பெரியது அப்படின்னு நான் சொன்னா, அது எப்படி அப்படின்னு கொஞ்சம் ஆச்சரியமாதான் பாப்பீங்க.

நான் மட்டும் இல்ல இப்போ நம்ம உலக வரைப்படத்தையே சரி செய்யணும். அது நேர்மையானதா இல்ல அப்படின்னு ஆப்பிரிக்காவில இருந்து குரல்கள் எழுத தொடங்கி இருக்கு.

கிட்டத்தட்ட 500 வருஷமா நம்ம பயன்படுத்துற மேப் தப்பு அத மாத்தணும் அப்படின்னு சொன்னா கொஞ்சம் பகீர்னு தான் இருக்கும். சரி இப்போ உலக அளவுல நம்ம பயன்படுத்துற மேப்ல அப்படி என்ன பிரச்சனை அது ஏன் நியாயமற்றதா இருக்குன்னு ஆப்பிரிக்கன் யூனியன் கருது அப்படின்னு விரிவா பார்க்கலாம்.

இப்ப வரைக்கும் கூகுள் மேப் தொடங்கி பள்ளிக்கூட குழந்தைகளோட அட்லஸ் புத்தகம் வரைக்கும் நம்ம பயன்படுத்துறது மெர்கேட்டர் அப்படிங்கிறவரு வடிவமைத்த மேப்பதான். இவரு 16 ஆம் நூற்றாண்டுல இதை வடிவமைச்சாரு.

இது கடல் வழி பயணத்துக்கு பயன்படுற வகையில ஐரோப்பாவை சேர்ந்த மாலூமிகளோட பயணம் மற்றும் வணிகத்துக்காக முதன் முதலா பயன்படுத்தப்பட்டது.

அதே நேரம் ஐரோப்பா மற்ற நாடுகளை ஆக்கிரமிச்சு காலனித்துவம் பண்ணவும் இந்த மேப்தான் காரணமா இருந்திருக்கு. பூமி அடிப்படையில ஒரு நீல்வட்ட கோல வடிவம் கொண்டது. அதாவது பூமியோட துருவ பகுதிகள் சற்று தட்டையாகவும் பூமத்திய ரேகை பகுதி சற்று அகலமாகவும் இருக்கும்.

ஆனா நம்ம பயன்படுத்துற மேப் தட்டையானதா இருக்கும். உதாரணத்துக்கு ஒரு ஆரஞ்ச எடுத்துப்போம். அதை முழுமையா தோல் உரிச்சு அதோட தோலை பிளாட்டா வச்சா என்ன நடக்கும்? அது ஸ்ட்ரெட்ச் ஆகும். நடுவுல இருக்கற போர்ஷன் இயல்பான அளவிலையும் மேல் மற்றும் கீழ்மட்ட பகுதிகள் ஸ்ட்ரெட்ச் ஆகி இயல்பை விட பெரிய அளவிலையும் தெரியும்.

அதோட கோல வடிவத்தில இருக்கிற மேல் மற்றும் கீழ் பகுதிகள் இப்போ பெருசா மாறிடும். இதையேதான் மெர்கேட்டர் உலக வரைப்படத்திலயும் பண்ணிருக்காரு. அச்ச ரேகைகளை நீட்டி பூமத்திய ரேகை பகுதியை அழுத்துறதன் மூலமா மெர்கேட்டர் கணிப்பு ஒவ்வொரு கண்டங்களோட அளவையே சிதைக்கிற வகையில் அமைஞ்சிடுச்சு அப்படின்னு விமர்சிக்கப்படுது.

அதாவது தட்டையாக்குவதன் மூலமா மெர்கேட்டர் மேப்ல 30 மில்லியன் சதுர கிலோமீட்டர் கொண்ட ஆப்பிரிக்கா கிரீன்லாந்தோட சரிசம அளவுக்கு சுருக்கி பார்க்கப்படுது. ஆனா உண்மையில ஆப்பிரிக்கா கிரீன்லாந்த விட 14 மடங்கு பெரிய பகுதி.

ஆப்பிரிக்கா கனடாவை விட மூணு மடங்கு பெருசு. ரஷ்யாவை விட ஒன்னர மடங்கு பெருசு. அதேபோல தென் அமெரிக்காவும் ஐரோப்பாவை விட ரெண்டு மடங்கு பெருசு. ஆனா மெர்கேட்டர் மேப்ல ஆப்பிரிக்காவை விட ஐரோப்பா பெருசா இருக்கு.

அதேபோல கேனடா, ரஷ்யா, வடக்கு ஐரோப்பா பெருசாவும் பூமத்திய ரேகை கடக்கிற பகுதிகள் அதாவது நடுவுல இருக்கற இந்தியா, ஆப்பிரிக்கா, தென்னமெரிக்க பகுதிகள் அளவுல சிறியதாவும் மாற்றப்பட்டிருக்கு.

காலம் செல்ல செல்ல மெர்கேட்டர் மேப் பள்ளி புத்தகங்கள், டிஜிட்டல் பிளாட்பார்ம்
அலுவலகங்கள்ல தொங்கவிடப்பட்டிருக்க வரைப்படங்கள்னு உலகம் முழுக்க எல்லா இடத்திலயுமே ஏற்றுக்கொள்ளப்பட்டுருச்சு.

சரி இப்ப ஏன் மேப்பையே மாத்தணும்? அதனால என்ன பலன்? அதான் இவ்வளவு நாளா பயன்படுத்தி பழகிட்டோமே போன்ற கேள்விகள் எழலாம். அடிப்படையில ஆப்பிரிக்காவோட அளவு பெரியது அப்படிங்கிற உண்மையை உலகம் ஒப்புக்கொள்ளணும் அப்படிங்கிறதுதான் சேஞஸ் த மேப் கேம்பெயினோட அடிப்படை நோக்கம்.

அதுவும்ல்லாம பல வருஷங்களுக்கு முன்னாடி மாலுமைகளுக்குன்னு வடிவம் வைக்கப்பட்ட மேப் ஒரு கண்டத்தோட அரசியல் சமூக பொருளாதார வரலாற்றுக்கே சிதைச்சிருச்சு அப்படின்னும் சொல்லப்படுது.

அதாவது இவ்வளவு வருஷமா அளவுல சிறியதாக காணப்படுற ஒரு கண்டம் குறைந்த அளவு அரசியல் அதிகாரமே கொண்டது அப்படிங்கிற நரேஷன் கூட உலக மக்களிடையே இருக்கு. ஏன்னா அளவுக்கும் அதிகாரத்துக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறதுதான் காரணம்.

அப்படித்தான் அது ஆப்பிரிக்கர்களை மற்ற உலக நாடுகள் பார்க்கறதுலயும் அவங்க வரலாற்றிலயும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கு அப்படின்னும் சொல்லப்படுது. இது ஒரு நீண்ட கால விவாதமா இருந்தாலும் கூட இந்த வெஸ்ட் விங் அப்படிங்கிற தொலைக்காட்சி சீரீஸ் மூலமா பலருக்கும் தெரிய வந்துச்சு.

2001 வது வருஷம் வெளியான இந்த சீரீஸோட பிரபலமான ஒரு காட்சியில மெர்கெட்டர் இவ்வாறு தலைமுறை தலைமுறையாக கிரீன்லாந்த் ஆப்பிரிக்காவிற்கு சமமான நாடு அப்படின்னு உலகம் நம்புவதற்கு தவறாக வழிநடத்தி இருக்காரு. அப்படிங்கிறத வரைப்பட கலைஞர்கள் குழு விளக்குறது மாதிரி ஒரு காட்சி இருக்கும்.

இப்ப 55 நாடுகளை உள்ளடக்கன ஆப்பிரிக்க யூனியன் மெர்கேட்டர் ப்ரொஜெக்ஷனுக்கு பதிலா கண்டங்களோட அளவு பாரபட்சமற்ற முறையில உண்மையான அளவை பிரதிபலிக்கிற வகையில இருக்கிற 2018 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட ஈக்குவல் எர்த் ப்ரொஜெக்ஷன் அப்படிங்கிற மாடன் மேப்ப பயன்படுத்தணும்.

இதன் மூலமா உலகம் ஆப்பிரிக்காவை பார்க்கிற முறையே மாறும் அப்படின்னும் வலியுறுத்தி இருக்கறாங்க.