நெல்லையில் மாற்று சமூக பெண்ணை காதலித்ததால் ஐ.டி ஊழியர் கவின் படுகொலை செய்யப்பட்ட வழக்கில். அவரது காதலி மற்றும் சுர்ஜித்திடம் CBCID எஸ்.பி ஜவகர் நேரில் விசாரணை செய்து வருகிறார்.
நெல்லையில் கவின் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தற்போது பரபரப்பான ஒரு சூழலை எட்டியிருக்கிறது. அதாவது இந்த வழக்கில் ஏற்கனவே ஆவணங்கள் அனைத்தும் திரட்டப்பட்டிருக்கிறது CBCID போலீசாரால்.
அதாவது கொலை நடந்த இடத்தில் கிடைக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் மற்றும் சுபாஷினி அதாவது இந்த கவின் காதலித்தாக சொல்லப்பட்ட அந்த பெண் சுபாஷினி அவர் ஏற்கனவே வாக்குமூலம் அளித்திருந்தார் .
அந்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் அதேபோல கொலை செய்த சுர்ஜித் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையிலும் கிடைக்கப்பெற்ற ஆவணங்களின் அடிப்படையில் ஒத்தி செய்து பார்க்கக்கூடிய ஒரு சூழல் இப்போது இருக்கிறது காவல்துறைக்கு.
அந்த அடிப்படையில் அனைத்து கிடைக்கப்பெற்ற ஆவணங்கள் அனைத்தும் வாக்குமுலத்தின் அடிப்படையில் ஒத்துப்போகிறதா என்பதை உறுதி செய்கிறார்கள். கிடைக்கப்பெற்ற இந்த இரண்டு நாட்களுக்குள் இந்த அனைத்து நிகழ்வுகளும் நடக்க வேண்டும்.
ஏனென்றால் நாளை மாலை 6.00 மணிக்கு நீதிமன்றத்தில் மீண்டும் சுஜித் மற்றும் அவர் தந்தை சரவணன் உதவி காவல் ஆய்வாளர் இருக்கக்கூடிய இருவரையும் ஒப்படைக்க வேண்டும் .இந்த நிலையில் தற்பொழுது CBCID எஸ்.பி சென்னையில் இருந்து நேரடியாக தூத்துக்குடி விமான நிலையம் வழியாக நெல்லை வந்திருக்கிறார்.
திரு ஜவகர் அவர்கள் தற்பொழுது இந்தவிசாரணையை நேரில் மேற்கொள்கிறார் .
எனவே இதில் கிடைக்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை சரியாக செல்கிறதா ,இரண்டு நாட்களுக்குள் இவர்கள் எதிர்பார்த்த முழு விவரங்களும் கிடைக்க பெருமா என்பது குறித்த தகவல்கள் இன்னும் சில நிமிடங்களில் தெரியவர வாய்ப்பு இருக்கிறது .
எனவே இந்த இரண்டு நாள் விசாரணை என்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. CBCID கையில் எடுத்த பிறகு இன்னும் சில வாரங்களில் அவர்கள் நீதிமன்றத்தில் இது சம்பந்தமான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிலையில் இந்த வழக்கில் இந்த இரண்டு நாள் விசாரணை மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.








