Home தமிழகம் லாரி ஓட்டுனரின் மகள் மருத்துவ கனவை அரசு நிறைவேற்றுமா?

லாரி ஓட்டுனரின் மகள் மருத்துவ கனவை அரசு நிறைவேற்றுமா?

விழுப்புரத்தில் லாரி ஓட்டுனரின் மகள் நீட்தேர்வில் வெற்றி பெற்று ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவ கனவை நனவாக்கி உள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் வானூரை சேர்ந்தவர் மாணிக்கம். லாரி ஓட்டுநரான இவரது மகள் ஷீலா நீட்தேர்வில் 489 மதிப்பெண் பெற்றதால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சீட் கிடைத்தது.

ஒழுகும் குடிசை வீட்டில் தனது மருத்துவ கனவை நனவாக்கிய ஷீலாவுக்கு ஊர் மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் கல்லூரி படிப்பை தொடர போதிய வருமானம் இல்லாததால் மாணிக்கத்தின் குடும்பத்தினர் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.

மருத்துவ கல்லூரியில் சேர்ந்து தங்கி படிக்க நிதி உதவி அளிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

எனக்கு சின்ன வயசுல இருந்தே டாக்டர் ஆகனும் பெரிய ஆசை. அதனால நான் நீட்தேர்வுக்கு படிச்சிட்டு அதுல 489 மார்க் எடுத்து இருக்கேன்.

அது எனக்கு இப்ப ஸ்டான்லி மெடிக்கல் காலேஜ்ல சீட் கிடைச்சிருக்கு. கவர்மெண்ட் காலேஜா இருந்தாலும் இப்ப எங்க அப்பாவால அத கட்டற அளவுக்கு வருமானம் இல்லை அதனால அரசு எங்களுக்கு உதவி பண்ணா மிகவும் உதவியாக இருக்கும்.