டிஜிபி பதவியில் இருந்து நாளை மறுநாள் ஓய்வு பெறும் சங்கர் ஜிவால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தீயணைப்பு ஆணைய தலைவராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டம் ஒழங்கு டிஜிபியாக இருப்பவர் சங்கர் ஜிவால் அவர்கள். வருகின்ற 31 ஆம் தேதியோடு அவருடைய பதவி காலம் முடிவடையக்கூடிய நிலையில் இன்று அவருக்கு பிரிவு உபச்சார விழாவானது ராஜரத்தின மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
அவருக்கு புதிதாக உருவப்பட்ட தீயணைப்பு துறை தலைவர் பதவி வழங்கப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலே தற்போது அதற்கான உத்தரவானது பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
தீயணைப்புத்துறை தலைவராக டிஜிபி சங்கர்ஜிவால் நியமித்து அரசின் கூடுதல் தலைமை செயலாளர் குமார் அவர்கள் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். தீ மற்றும் உயிர்நீப்பு பணிகளில் புதிய தொழில் நுணுக்கங்களை செயல்படுத்தவும் கட்டிடங்களுக்கு வழங்கப்படும் தீ பாதுகாப்பு சாண்டுதல் மீட்பு தொடர்பான பணிகளை முறைப்படுத்துதல்,
தீயணைப்பு மற்றும் துறை பணியாளர்களின் கருத்துக்கொண்டு அவர்களுக்கு தேவையான திட்டங்களை புதிய பயிற்சி முறைகளை பரிந்துரைக்கும் நோக்கத்தோடு இந்த ஆணையம் வந்து புதிதாக அமைக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் 10.5.2022 அன்று இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் அதை முறைப்படுத்தி தற்போது அமல்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சங்கர் ஜீவாலா அவர்கள் இதற்கான தலைவராகவும் வருகின்ற 1.9 .2025 முதல் இந்த உத்தரவானது தெரிவிக்கப்பட்டிருக்கிறது.சங்கர்ஜேவால் அவர்கள் மட்டுமில்லாமல் ஒரு கூடுதல் இயக்குனர் மற்றும் கன்வினர் உறுப்பினர் செயலாளர் முன்னாள் தலைமை பொறியாளர் உள்ளிட்ட சில அதிகாரிகளுக்கும் பதவிகள் வழங்கப்பட்டு இந்த உத்தரவானது வழங்கப்படுகிறது.








