Home தமிழகம் மதுரையில் பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு”உடலை கண்டு கதறி அழுத தாய்

மதுரையில் பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு”உடலை கண்டு கதறி அழுத தாய்

மதுரை மாடக்குளம் பகுதியில் கண்மாயில் நண்பர்களுடன் குளிக்க சென்ற 10ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

.பள்ளி மாணவர் கண்மாயில் குளித்தபோது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை மாநகருக்கு உட்பட்ட மாடக்குளம் கண்மாய். மதுரையுடைய குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய இந்த கண்மாயில் கடந்த ஐந்து வருடங்களாக நீர் நிறைந்து காணப்பட்டு வருகிறது.

அந்த வேளையிலே தற்போது நீரானது குறைந்து வரக்கூடிய வேளையில் மதுரை திருப்பரங்குன்றம் நோக்கி செல்லக்கூடிய பிரதான சாலை பகுதியில் இருக்கக்கூடிய பசுமலை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலே பத்தாம் வகுப்பு பயிலக்கூடிய நவீன் குமார் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு வகுப்பிற்கு பிறகு நண்பர்களோடு சேர்ந்து.

மாடக்குளம் கண்மாயில் இருக்கக்கூடிய தெற்குமடை என்று சொல்லக்கூடிய தென்பகுதிக்கு அதாவது இருப்பு பாதை ரயில் ட்ராக் என்று சொல்லக்கூடிய பகுதிக்கு அருகிலே இருக்கக்கூடிய தேங்கி இருந்த குட்டை போன்ற அமைப்புடைய அந்த பகுதியிலே சுமார் ஐந்து மாணவர்கள் குளித்ததாக கூறப்படுகிறது.

அப்போது ஆழம் தெரியாமல் இவர் நீச்சல் தெரியாத நிலையிலே ஆழமான பகுதிக்கு சென்றதாகவும் அங்கே சகதியில் மாட்டிக் கொண்டதாகவும் சொல்லப்படக்கூடிய வேலையிலே பரிதாபமாக மூச்சு திணறல் ஏற்பட்டு தண்ணீரில் அவர் பலியானர்.

இந்த நிலையிலே அங்கு அந்த பகுதியில் இருந்த மாணவர்கள் உடனடியாக நீருக்குள் இறங்கி இறந்த அந்த நபருடைய உடலை மீட்டு கரையில் வைத்து மேலும் அவர் கூட வந்திருந்த நபர்கள் யாரும் இருக்கிறார்கள் என்று பார்த்தபோது யாருமில்லை அங்கே பள்ளி மாணவருடைய அந்த புத்தக பை அடங்கிய பை இருந்ததை தொடர்ந்து அவர் எந்த பள்ளியில் படிக்கிறார் என்ற தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் அருகில் இருக்கக்கூடிய திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திற்கும் அவருடைய பெற்றோருக்கும் தகவல் கொடுத்தார்கள்.

உடனடியாக பசுமலை பள்ளியிலே உதவியாளராக பணியாற்றக்கூடிய அவரது தாயார் அங்கே வந்து அழுத நிலையில் மகனை மடியில் வைத்து அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது. வீட்டிலே ஒரே பையனாக இருக்கக்கூடிய அவர் நண்பர்களோடு குளிக்க வந்த இடத்தில் இந்த மாடக்குளம் கண்மாயில் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று சொல்லலாம். மேலும் இறந்த அந்த மாணவருடைய உடலானது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருக்கிறது.

குறிப்பாக மாடக்குளம் கண்மாயை பொறுத்தவரை நீரளவும் அதனுடைய கொள்ளளவும் அதிகம் என்பதால் மாடக்குளம் கிராமம் சார்ந்த இளைஞர்கள் ஒவ்வொரு வார இறுதியிலுமே ரோந்து பணியில் தன்னார்வளாராகவே அந்த பகுதியில் இதுபோன்று வெளியூர் பகுதியிலிருந்து வரக்கூடிய மாணவர்களோ அல்லது வேறு நபர்களோ குளித்தார்கள் என்றால் அவர்களுக்கு அறிவுரை கூறி வெளியில் அனுப்பி வருவது வழக்கம் .

ஆனால் எதிர்பாராத விதமாக இது போன்ற ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டிருப்பது மாடக்குளம் கிராம மக்களுக்கு மட்டுமல்ல அந்த பள்ளி மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது