திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஜப்பான் மற்றும் சீன நாட்டினர் ருத்ரபாராயணம் மந்திரத்தை சொல்லி வழிபாடு நடத்தினர்.
இவர்கள் முதலில் சம்மந்த விநாயகரை வழிபட்டு பின்னர் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து உண்ணாமலை அம்மன் சன்னிதி முன்பு உள்ள தங்க கொடி மரம் அருகே ருத்திர பாராயணம் கூறி வழிபாடு நடத்தினர்.








