Home தமிழகம் கண்ணாடி பாலம் அமைந்த பகுதியில் திடீர் நடவடிக்கை – காரணம் என்ன?

கண்ணாடி பாலம் அமைந்த பகுதியில் திடீர் நடவடிக்கை – காரணம் என்ன?

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கன்னியாகுமரி கடலில் விவேகானந்தர் நினைவுப்பாறை மற்றும் திருவள்ளூர் சிலை இணைக்கும் பகுதியில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டிருக்கின்றது.

இந்த பாலத்தை காண்பதற்காகவும் விவேகானந்தர் நினைவுபாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை காண்பதற்காகவும் தினம் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து கொண்டிருக்கின்றார்கள்.

சமீப காலமாக தொடர் விடுமுறை தொடர்ந்து கேரளாவை சார்ந்த, தமிழகத்தைச் சார்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நிலையில் கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டதை ஒட்டி அதை சுற்றிலும் தற்காலிக வேலி அமைக்கப்பட்டு அந்த பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

ஏனைய பகுதிகளை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்து வருகின்றார்கள். இந்த சம்பவம் தொடர்பாக சுற்றுலாத்துறை கேட்டபோது இந்த பகுதியில் வந்து ஏற்கனவே பல பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கின்ற வண்ணம் பூசல் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கின்ற சூழலில் அதில் சுத்தி கண்ணாடி மீது விழுந்ததால் விரிசல் ஏற்பட்டதாகவும் அதனால் தற்காலிகமாக சுற்றுலா பயணிகளை அனுமதிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

விரைவில் அதை சரி செய்வதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறி உள்ளனர்.