துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று முதல் சட்டமன்ற தொகுதி வாரியாக சென்று திமுக நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆலோசனை செய்ய போவதாக அறிவித்திருக்கிறார்.
அறிஞர் அண்ணாவின் சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் அவர் இந்த பயணத்தை தொடங்குகிறார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காஞ்சிபுரம் இன்றைய தினம் சென்றிருக்கிறார்.
அங்கு முன்னாள் முதலமைச்சர் மூத்த தலைவர் ஒருவராக இருக்கக்கூடிய திமுக முன்னோடியில் ஒருவரான பேரறிஞர் அண்ணா அவர்களுடைய நினைவு இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்தி இருக்கிறார்.
அந்த நிகழ்வினை தனது சமூக பக்கத்தில் பதிவிட்டுருக்கக்கூடிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக வினுடைய ஒன்றிய நகர பகுதி பேரூர் வார்டு கிளைக்கழக செயலாளர்கள் மற்றும் வாக்கு முகவர்களை சட்டமன்ற தொகுதிவாரியாக சந்திக்க இருப்பதாகவும் அந்த சந்திப்பை பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மண்ணிலிருந்து இன்று தொடங்குவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
திமுக தேர்தல் பணிகளை ஓராண்டுக்கு முன்னதாகவே தொடங்கிவிட்ட சூழலில் அடுத்தடுத்த கட்டங்களாக ஒவ்வொரு திட்டங்களை திமுக செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக 2026 சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களில் திமுக வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கு நிர்ணயித்து அதற்கான தேர்தல் பணிகளில் திமுக மும்முரமாக வேலை செய்திருக்க கூடிய நிலையில் தற்பொழுது கட்சியினுடைய முகமாக இருக்கக்கூடிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவருடைய சுற்றுப்பயணத்தை இன்றைய தினம் தொடங்குவதாக தெரிவித்திருக்கிறார்.
சட்டமன்ற தொகுதி வாரியாக கட்சியை சார்ந்த ஒவ்வொரு நிர்வாகிகளையும் சந்தித்து அவர் பேச இருப்பதாகவும் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் இந்த அறிவிப்பில் தெரிவித்திருக்கிறார்.
மேலும் வாக்கு முகவர்கள் கூட்டங்கள் என்பது ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. திமுகவினுடைய கட்சியினுடைய அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட மண்டல வாரியாக கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.
அதேபோன்று ஒவ்வொரு மண்டலத்திற்கும் கொடுக்கப்பட்டிருக்க பொறுப்பாளர்கள் கூட்டங்கள் மீண்டும் அவர்கள் நடத்தி இருக்கிறார்கள்.
ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். இந்த சூழல் தற்பொழுது சட்டமன்ற தொகுதிவாரியாக கட்சியினுடைய அனைத்து நிர்வாகிகளும் சந்திப்பது மட்டுமில்லாமல் வாக்கு முகவர்களையும் சந்திக்க இருப்பதாகவும் துணை முதலமைச்சர் அவருடைய சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.








