Home தமிழகம் “2026 வெற்றி குறிக்கோளுடன்… திமுகவுக்கு ஸ்டாலின் மாஸ்டர் பிளான் ரெடி”

“2026 வெற்றி குறிக்கோளுடன்… திமுகவுக்கு ஸ்டாலின் மாஸ்டர் பிளான் ரெடி”

எம்.பி-க்கள் எம்எல்ஏ க்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் கடுமையாக பணியாற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார். அதேபோல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் வாரத்தில் நான்கு நாட்கள் தங்கி மக்கள் பணியாற்ற வேண்டும் என்றும், அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் குறிப்பாக நான்கு நாட்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதியில் தங்கி மக்கள் பணியாற்ற வேண்டும். அதோடு மட்டுமல்லாமல், 15 நாட்கள் ஒருமுறை ஆற்றிய பணி குறித்து அறிக்கையை தனக்கு அளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டத்தில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

அண்ணா அறிவாலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு விதமான அறிவுத்தல்களை வழங்கி இருக்கிறார்.

குறிப்பாக அரசு செயல்படுத்தி வரக்கூடிய திட்டங்கள் தொடர்பாக செயல்படுவதோடு மாவட்ட ஆட்சியர்களுடன் அந்த திட்டத்தினுடைய பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பது குறித்து கேட்டறிய வேண்டும்.

அதிலும் குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் ஈடுபட்ட மகளிரை சேர்க்க கூடிய வகையில் முகாம்கள் நடைபெற்று வருகிறது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தகுதியில் உள்ள மகளிர் அனைவருக்கும் உரிமை தொகை கிடைப்பதற்கான உறுதிப்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் முதலமைச்சர் மு. க ஸ்டாலின் வழங்கி இருக்கிறார்.

அதோடு பல்வேறு திட்டங்களாக இருக்கும்போது 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை திமுக கூட்டணியை 40 க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்று சாதனைப்படுத்த அதற்கு அரும்பாடுபட்ட உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆகவே வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிக்கு கடுமையாக பணியாற்ற வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் வழங்கி இருக்கிறார்.

அதோடு நாடாளுமன்ற உறுப்பினர் தங்களது தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் தொடர்ச்சியாக அவர்களை சந்தித்து தேவைகளை கேட்டறிந்து அதன் மீது உரிய நடவடிக்கை ஏற்படுத்திட வேண்டும்.

அதேபோன்று அமைச்சர் பெருமக்களோடு மண்டல பொறுப்பாளர்கள் அதேபோன்று மாவட்ட செயலாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி பார்வை ஒருங்கிணைந்தும் செயல்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் திமுக தலைவர் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கி இருக்கிறார்.

நாடாளுமன்ற நடைபெறக்கூடிய அதாவது நாடாளுமன்றம் நடைபெறும் நாட்களை தவிர்த்து குறைந்தது வாரத்தில் நான்கு நாட்களாவது தொகுதியில் தங்கி மக்களை சந்தித்து அவருடைய தேவைகள் என்ன என்பதை அறிந்து பணியாற்ற வேண்டும்.

ஆகவே ஒன்றிய அரசினுடைய மக்கள் விரோத நடவடிக்கை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தலை முதலமைச்சர் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் வலியுறுத்தி இருக்கிறார்