கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்திருக்கிறார். தமிழக அரசு, தவெக, தொடர்ந்து தற்போது பிரதமர் மோடியும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்திருக்கார்.
கரூரில் நேற்றைய தினம் தமிழக வெற்றி கழகத்தினுடைய தேர்தல் பரப்புரையின் பொழுது 39 நபர்கள் கூட்ட நெரிசலில் உயிர் இழந்து இருக்கிறார்கள்.இந்த நிலையில் தமிழ்நாட்டின் அரசு கரூரில் நடந்த பேரணியின் போது நடந்த சம்பவத்தில் உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் மத்திய அரசு சார்பாகவும், பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்தும் இரண்டு லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என தற்பொழுது மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
மேலும் காயமடைந்த நபர்களுக்கு 50,000 ரூபாயும் பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக நேற்றைய தினம் உயிரிழந்த 39 நபர்களுக்கு தமிழக அரசு சார்பாக ஏற்கனவே சமூக நிவாரணம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல தமிழக வெற்றி கிழக்கத்தின் சார்பாக 20 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தற்பொழுது மத்திய அரசும் இந்த கூட்டத்தில் உயிரிழந்த நபர்களுக்கான நிவாரணம் தொகை என்பது அறிவித்திருக்கிறது. நேற்றைய தினம் கரூரில் நடைபெற்ற துரதிஷ்டமான சம்பவத்தில் உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ₹2 லட்சம் ரூபாய் தொகை கருணையாக வழங்கப்படும் எனவும், இந்த கூட்டத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக்கூடிய நபர்களுக்கு ₹50,000 நிவாரணமாக வழங்கப்படும் என தற்பொழுது மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
நேற்றைய தினம் இந்த நிகழ்வு நடைபெற்ற பிறகு மோடி அவர்கள் தங்களுடைய இரங்களை தெரிவித்து ,இந்த விஷயம் மிகவும் தன்னை பாதித்ததாக நேற்றைய தினம் அவர் எக்ஸ் வலைத்தள பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதேபோல குடியரசு தலைவர் ,மத்திய அமைச்சர் அமித்ஷா, இதேபோல மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டபல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேற்றைய தினம் கரூரில் நடந்த கூட்டத்தில் உயிரிழந்த 39 நபர்கள் தொடர்பாக தங்களுடைய இரங்களை தெரிவித்திருக்கக்கூடிய நிலையில் தற்பொழுது மத்திய அரசும் 39 நபர்களுக்கு நிவாரணம் என்பது அறிவித்திருக்கிறது.








