தவெக கட்சி தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் தற்பொழுது ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக முக்கிய செய்தி வெளியாக இருக்கிறது. கரூர் சம்பவத்தின் எதிரொளியாக தற்பொழுது இதனை முக்கிய செய்தியாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
கரூரில் மக்கள் சந்திப்பு சுற்று பயணத்தின் போது 41 நபர்கள் உயிரிழந்து அவரது உடல்கள் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டிருக்கக்கூடிய இந்த நிலையில் இந்த துயர சம்பவத்தை ஒட்டி தமிழக வெற்றிக்கழக தலைமை ஒரு மிக முக்கிய முடிவை எடுத்திருக்கிறது அதிகாரப்பூர்வத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள் .
அந்த வகையில் நம் சொந்தங்களை இழந்து வேதனையிலும் வருத்ததிலும் இருப்பதால் நம் கழக தலைவர் அவர்களின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என்றும் ,இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை கட்சி தலைவருடைய ஒப்புதலோடு தெரிவித்து கொள்வதாக தமிழக வெற்றிக்கழக தலைமை செயலகத்திலிருந்து இந்த அறிவிப்பு என்பது வெளியிடப்பட்டிருக்கிறது.
அடுத்த இரண்டு வாரங்கள் எனும்போது வரும் சனிக்கிழமை அன்று வேலூர் ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளார். அதேபோல அக்டோபர் 11 ஆம் தேதி அன்று கடலூர் மற்றும் புதுவையில சுற்றுப்பயணம் மேற்கொள்ளதாக இருந்தார். இந்த நான்கு இடங்களுக்குமான மனுக்கள் கொடுக்கப்பட்டு அனுமதிகள் பெறும் நிலையில் இந்த தற்காலிக ஒத்திவைப்பு என்பது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதிகாரப்பூர்வ செய்தியாக தற்போது தமிழக வெற்றி கழக தலைமை செயலகத்திலிருந்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.








