ஹாலிவுட்ல இப்போ ஒரு புது நடிகை வந்திருக்காங்க. அவங்க அழகா இருக்காங்க. சூப்பரா நடிக்கிறாங்க. இன்ஸ்டாகிராம்ல ஆயிரக்கணக்கான ஃபாலோவர்ஸ் வச்சிருக்காங்க. ஆனா ஒரு முக்கியமான விஷயம் அவங்க உண்மையிலேயே ஒரு மனுஷியே கிடையாது. ஆமா. அவங்கதான் ஹாலிவுட்டி முதல் ஏஜ (AI)உருவாக்கப்பட்ட நடிகை டில்லி நோர்வுட்(“Tilly Norwood”).
இவங்க யாரு? எப்படி உருவானாங்க? இவங்களை பார்த்து ஏன் எம்மிலி பிளான், ஓபி கோல்பர் மாதிரி பெரிய ஹீரோயின்கள் எல்லாம் டென்ஷன் ஆகுறாங்க. வாங்க இந்த டிஜிட்டல் நடிகையை பத்தி விரிவாக பார்க்கலாம்.
நான் ஒரு ஏஜ யாக இருக்கலாம். ஆனால் எனக்குள் இப்போது மிகவும் உண்மையான உணர்ச்சிகள் ஏற்படுகின்றன. இதுதான் டில்லி நோர்வூட்டின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கும் போஸ்ட். டில்லியை உருவாக்கியவர் எலைன் வான் டெர் வெல்டன்(Eline Van der Velden) என்ற டச்சு நாட்டு நடிகை. அவரோட நிறுவனம்தான் இந்த ஏஐ நடிகையை டிசைன் பண்ணிக்காங்க.
ஏஐ கமிஷனர் என்ற ஒரு காமெடி படத்தில் டில்லி நடித்தும் இருக்காங்க. ஆச்சரியம் என்னன்னா இந்த படத்தோட கதையை எழுதியதும் சார் ஜிபிடி(ChatGPT)தான். சரி எல்லாம் நல்லாதானே போயிட்டு இருக்கு. அப்புறம் ஏன் இவ்வளவு சர்ச்சை, பிரச்சனையே சூரி திரைப்பட விழாவிலதான் ஆரம்பிச்சது.
அங்கே சில பெரிய ஹாலிவுட் ஏஜென்சிகள் டில்லி நோர்வூட்டை ஒரு உண்மையான நடிகை மாதிரி ஒப்பந்தம் செய்ய போறதா அறிவிச்சாங்க. இதுதான் உண்மையான நடிகர்கள் வயித்துல புலியை கரைச்சது. பிரபல நடிகை எமிலி பிளேன் உபி கோல்பர் போன்ற லிஸ்ட் ஸ்டார்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிச்சாங்க.
அமெரிக்காவின் நடிகர் சங்கமான எஸ் கே ஜி டிஆர்ஏ ஒரு காட்டமான அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அவங்க என்ன சொன்னாங்கன்னா டில்லி நோர்வுட் ஒரு நடிகையே கிடையாது. அது எண்ணற்ற உண்மையான கலைஞர்களின் உழைப்பிலிருந்தும் நடிப்பிலிருந்தும் திருடி பயிற்சி கொடுக்கப்பட்ட ஒரு கம்ப்யூட்டர் ப்ரோக்ராம். அவ்வளவுதான்.
இதற்கு டில்லியோட கிரியேட்டர் என்ன சொன்னாங்க? இந்த எதிர்ப்புகளுக்கு பதிலளித்த எலைன் வான்டர் வெல்டன் டில்லி ஒரு மனிதனுக்கு மாற்றுமல்ல. அது ஒரு கலை படைப்பு. ஒரு ஓவியத்தை வரைவது போல ஒரு கதாபாத்திரத்தை எழுதுவது போலத்தான் நாங்களும் டில்லியை ஒரு கலைப்படைப்பாக உருவாக்கி உள்ளோம் என்று விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால் இந்த விளக்கம் உண்மையான நடிகர்களின் பயத்தை போக்கவில்லை. நாளைக்கு நம்ம முகம், நம்ம நடிப்பு, நம்ம குரல் எல்லாத்தையும் வச்சு நமக்கே தெரியாம ஒரு ஏஜ நடிகரை உருவாக்கிட்டா என்ன பண்றது? நம்ம வேலைக்கு என்ன உத்தரவாதம் இதுதான் அவங்களோட நியாயமான கேள்வி.
ஒரு பக்கம் தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சி, மறுபக்கம் மனிதர்கணி வேலைவாய்ப்பு மற்றும் கலைக்கான அச்சுறுத்தல். இந்த ஏஐ நடிகையின் வருகை ஹாலிவுட்டில் ஒரு புதிய தீவிரமான விவாதத்தை தொடங்கி வைத்துள்ளது. இந்த டிஜிட்டல் சுனாமி சினிமாவின் எதிர்காலத்தை எப்படி மாற்றி அமைக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.








