Home உலகம் டிரம்ப் தலைமையில் 20 நாடுகள் காசா அமைதி பேச்சு – மோடி பங்கேற்பாரா?

டிரம்ப் தலைமையில் 20 நாடுகள் காசா அமைதி பேச்சு – மோடி பங்கேற்பாரா?

காசாவில் போரை நிறுத்தி அமைதியை மீட்பது குறித்து எகிப்தில் நாளை ஆலோசனை நடத்தப்படுகிறது. இதற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது . காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்திருக்கிறது. காசாவில் போரை நிறுத்தி அமைதியை மீட்பது குறித்து எகிப்தில் நாளை ஆலோசனை நடைபெற இருக்கிறது.

டிரம்ப் உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்கிறார்கள். இதில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. எகிப்தில் நாளை 20 நாடுகளின் தலைவர்கள் காசா அமைதி தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இஸ்ரேல், காசா மீது தொடுத்து வரும் போரால் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இதற்கு அமைதி வேண்டி பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் டிரம்பின் தலையீடு காரணமாக தற்போது இஸ்ரேல் காசா இடையே ஒரு அமைதி ஒப்பந்தம் தற்காலிகமாக கையெழுத்தாகி இருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி காஜா அமைதி ஒப்பந்தத்தை நிறைவு செய்வதற்கான நிகழ்ச்சியிலே கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பேச்சுவார்த்தை விரிவாக நடைபெற்றிருக்கிறது. பல கட்டங்களாக நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையை, இகிப்து, மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய உதவி மூலமாக தற்போது இறுதி கட்டத்திற்கு கொண்டு வந்திருக்கின்றன.

அதன்படியே இஸ்ரேலிய கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும் எனவும் ,ஹமாஸ் கைதிகளை சிறையிலிருந்து இஸ்ரேல் விடுவிக்கும் எனவும் ,அதன் பிறகு இஸ்ரேல் காசா பகுதியில் தனது தாக்குதலை நிறுத்தி கொள்ளும் எனவும் ,அங்கு மக்கள் தங்களுடைய இல்லங்களுக்கு திரும்புவதற்காக வழி செய்வதற்கு பல்வேறு விதமான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும், மேலும் உணவு, மருந்துகள் உள்ளிட்டவை காத்தா பகுதி மக்களை சென்றடைய இஸ்ரேல் தடையாக இருக்கிறாது என்றும் பல்வேறு விதமான ஒப்பந்தங்கள் தயார் செய்யப்பட்டிருக்கின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் முன்னின்று இஸ்ரேல் பிரதமரை அமெரிக்காவுக்கு அழைத்து அங்கிருந்து இந்த பேச்சு வார்த்தைகளுக்கான ஆரம்ப புள்ளியை தொடங்கி வைத்தார். தற்போது அந்த பேச்சு வார்த்தைகள் நிறைவு பெற இருக்கின்றன. எகிப்து நாட்டின் தலைவரான எல்சிசி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் இந்த நிகழ்ச்சியிலே பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்ள வேண்டும் என விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.

பிரதமர் மோடிக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்களை அழைக்க வேண்டும் என டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டிருக்கிறார். விரிவான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அமெரிக்கா யூரோப்பிய நாடுகள் மற்றும் பல்வேறு ஆசிய நாடுகள் குறிப்பாக அரேபிய நாடுகள் இஸ்ரேலுக்கு அருகில் உள்ள நாடுகள் ஆகியவற்றை அழைத்து இந்த அமைதி ஒப்பந்தத்தை விரைவாக அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று நாம் அமெரிக்கா விரும்புகிறது.

இந்த நிகழ்ச்சியிலே பிரதமர் மோடியும் கலந்து கொள்வாரா என்பதுதான் தற்போது மிகவும் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. பிரதமர் அலுவலகம் விரைவிலே இது குறித்து தனது நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்கும் என எதிர்பார்க்கலாம். பிரதமர் மோடி செல்வதாக இருந்தால் அதற்கான விரிவான அறிவிப்பு வழியாகும். இல்லாவிட்டால் பிரதமர் மோடி இங்கிருந்தே தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.