ஜாய் கிரிசில்டாவை விருப்பப்பட்டு திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும், பணம் பறிக்கும் நோக்கத்தில் கிரிசில்டா தன்னை மிரட்டி கட்டாயத்தின் பெயரில் திருமணம் செய்து கொண்டதாகவும், மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்திருக்கிறார்.
அதேபோல குழந்தை விவகாரத்தில் ஒருபோதும் டிஎன்ஏ பரிசோதனையை மறுத்ததில்லை என்றும், அந்த குழந்தை தன்னுடையதுதான் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் வாழ்நாள் முழுவதும் குழந்தையை பராமரித்து கொள்ள தயாராக உள்ளேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் ஜாய் கிரிசில்டா கோரிய பராமரிப்பு தொகை ஒன்றரை லட்சம் ரூபாயும் , காரின் இஎம்ஐ 1,25000 ரூபாயையும் தர மறுப்பு தெரிவித்து விட்டதாக விளக்கம் அளித்திருக்கிறார்.








