திருநெல்வேலியில் மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்ட ஏழு மாதங்களில் நெல்லை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு பரபரப்பானது. தந்தை தனது மகளுக்கு செய்த கொடுமையை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு, மகளிர் காவல் நிலத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில்தான் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தந்தைக்கு போக்சோ நீதிமன்றம் நீதிபதி சுரேஷ் குமார் அவர்கள் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். வழக்கு ஏழு மாதங்கள் விசாரணைக்கு உட்பட்ட நிலையில், இன்று மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.








